தொழிலாகு பெயர் : வற்றல் உண்டான். அளவையாகு பெயர் : படி அளந்தான். காரணவாகு பெயர் : ஏனையோர் கருவியாகு பெயர் என்பர். இவர் காரண ஆகுபெயர், கருவியாகுபெயர் என்று இரண்டாகக் கூறியுள்ளார். காரியவாகு பெயர் : இந்நூல் அலங்காரம். சொல்லாகு பெயர் : இந்நூற்கு உரை செய்தான் கருவியாகு பெயர் : திருக்குறள் முற்றிற்று. தானியாகு பெயர் : விளக்கு ஒடிந்தது. வினை முதலாகு பெயர் : இவ்வாடை கோலிகன். ஆகுபெயர் என்பது எழுவாய் - பயனிலை இயைபு சொல்லளவால் அமையக்கூடியது; மேலும் அது சொல்லுக்கும் ஆகுபெயருக்குரிய பொருளுக்கும் மேற்காட்டிய பொருள் இடம் போன்ற உறவு கொண்டிருக்கும் என்று பொன். கோதண்டராமன் அவர்கள் (ஆகுபெயர் அன்மொழித்தொகை) என்ற கட்டுரையில் இலக்கண உலகில் புதிய பார்வை என்ற நூல்; பக்: 4-25) விளக்கியுள்ளார். ‘பொருள் முதல் ஆறு ஆட்சி கைமாறனபு’ இதன்பொருள் விளங்கவில்லை. இச்சூத்திரம் இலக்கணவிளக்கம் 192, 193 ஆம் சூத்திரத்தையும் இலக்கணக் கொத்து 20-ஆம் சூத்திரத்தையும் தழுவியது. பின்போகமுற முடித்தும்’ என்ற மூன்றாவது நிலைக்கு விளக்கம் தெரியவில்லை. ஆதலால் ‘இலக்கணக் கொத்து’ 20-ஆம் சூத்திரத்தை ஒட்டிப் பொருள் எழுதப் பெற்றது. ‘உருபு ஏற்பது உருபே’ என்பதும் ஆராய்தற்குரியது. ஆகுபெயரை விளக்கும்போது நன்னூலார் ‘கருவி’ (290.1) என்று கூறியதை இலக்கண விளக்கத்தார் காரணம் என்று கூறினார். எனவே ஆகுபெயர் பற்றிய கருத்து இலக்கண விளக்கத்தை ஒட்டியது என்று கூறப்பட்டது. 41. | வேற்றுமையா வதிற்பெயர்,ஐ யால்குவ்வின் னதுகண், விளியுருபின் பெயர்முறையாம்; ஐகுவ்வோ டுருபாஞ், சாற்றுருபு, வேறுருபு, சொல்லுருபாய்ப் பிறவே தாம்,பலவாம்; அவற்றுளெழு வாய்க்குருபின் று(எ)ன்பார்; | |