உ
திருச்சிற்றம்பலம்
முத்துவீரியம்
சிறப்புப்பாயிரம்
அகனுல குவப்பப் பகல்கான்
றெழுதரும்
இரவியிற் றானொரு முதலே
யாகி
நிலவணி வேணிய னலர்தரு தன்மையின்
அகவிரு டொலைதர வறம்பொரு ளின்பம்வீ
டோவற வருளிய மூவறு மொழியுளும்
வடவேங் கடந்தென் குமரியா யிடைத்தமிழ்
எழுத்தொடு சொற்பொரு ளியாப்பணி யைந்தும்
எளிதிற் புலப்பட வியற்றித்
தருகென
உகளிள வராலின மகணிசூழ் நெல்லைப்
பதியின னிலக்கண விதிமுழு துணர்ந்தோன்
சங்கரன் மிலைந்த கங்கையில் வந்தோன்
சுப்பிர மணியதே சிகன்கவிப்
பெருமான்
அறைந்த னனாக வகத்திய நூல்வழி
முத்துவீ ரியமெனத் தற்பெயர் நிறீஇ
வகுத்தன னுறந்தை யகத்தெழுந்
தருளிய
முத்து வீரமா முனிவனென் பவனே.
என்பது யாதெனில், யாதானுமோர்
நூலுரைப்புழிப் பாயிரமுரைத்துரைக்க வென்பது
இலக்கணம்.
என்னை,
‘‘ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே’’
என்றாராகலின்: நூல் கேட்கப்புகும் மாணாக்கன்
பாயிரங்கேட்க வேண்டும்;கேளாக்கால்
குன்றுமுட்டிய
குரீஇப்போல இடர்ப்படும்.
|