எழுத்ததிகாரம்104முத்துவீரியம்

ளகரத்திற்கு அல்வழி முடிபு

381. அல்வழி யெல்லா முறழ்வா கும்மே.

(இ-ள்.) அல்வழிக்கண் உறழ்ந்து முடியும்.

(வ-று.) முள் + கடிது = முட்கடிது. (222)

ளகரத்தின் முன் தகரம்

382. தகரம் வரும்வழி தனிநிலை யாகும்.

(இ-ள்.) தகரவொற்றுவரின் ஆய்தமாகத் திரியுமென்க.

(வ-று.) முள் + தீது = முஃடீது எனவரும்.

(வி-ரை.)

‘ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே
தகரம் வரூஉங் காலை யான’ (புள்ளி - 104)

என்பது தொல்காப்பியம். (223)

நெடில் முன் ளகரம்

383. இயல்பா நெடுமைமுன் னென்மனார் புலவர்.

(இ-ள்.) நெடுமைக்கு முன்னின்ற ளகரமெய் யியல்பாம்.

(வ-று.) கோள்கடிது எனவரும். (224)

தொழிற் பெயர்

384. தொழிற்பெய ரெல்லாந் தொழிற் பெயரில.1

(இ-ள்.) தொழிற்பெய ரெல்லாம் உகரச்சாரியை பெறும்.

(வ-று.) துள் + கடிது = துள்ளுக்கடிது. (225)

இருள்

385. இன்னு மத்து மிருளொடு சிவணும்.

(இ-ள்.) இருளென்னுங் காலப்பெயர், இன்சாரியையும், அத்துச்சாரியையும்
பெறுமெனவறிக.

1. தொல் - எழுத் - புள்ளி - 106.