| எழுத்ததிகாரம் | 108 | முத்துவீரியம் |  
  
(இ-ள்.) வேற்றுமைக்கண்,
நெடிற்றொடர்க் குற்றியலுகரமும் உயிர்த்தொடர்க் 
குற்றியலுகரமும் டகர றகரங்கள்
இரட்டிக்கும். 
(வ-று.) ஆட்டுக்கால்,
முயிற்றுக்கால். (233) 
ஒற்று இடைமிகாக்
குற்றுகரம் 
393. ஒற்றிடை மிகாக்குற் றுகரமு முளவே 
     வல்லின மிகலத் திறத்தினு ளிலவே. 
(இ-ள்.) முற்கூறிய
இரண்டனுள் மெய்யெழுத்திடையின் மிக்கு முடியாத
மொழிகளும் 
உளவாம் அக்கூற்றினில் வல்லின
மிகாதியல்பாகும். 
(வ-று.) நாகுகால்;
வரகுகதிர் எனவரும். 
(வி-ரை.) 
‘ஒற்றிடை யினமிகா
மொழியுமா ருளவே 
அத்திறத் தில்லை
வல்லெழுத்து மிகலே’ (குற்றிய - 7) 
என்பது தொல்காப்பியம்.
(234) 
இயல்பாகும்
இடைத்தொடர் ஆய்தத்தொடர்கள் 
394. இடைத்தொட ராய்தத்
தொடரியல் பாகும். 
(இ-ள்.)
இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரமும் ஆய்தத் தொடர்மொழிக் 
குற்றியலுகரமும் மிகாதியல்பாம். 
(வ-று.) தெள்குகால்;
எஃகுகால். (235) 
வன்றொடர்,
மென்றொடர்க் குற்றுகரம் 
395. வன்றொடர் மென்றொட
ரிற்சில வலிக்கும். 
(இ-ள்.)
வன்றொடர்மொழிக் குற்றியலுகரம் மென்றொடர்
மொழிக் குற்றியலுகரங்களிற் 
சிலமிகும். 
(வ-று.) கொக்குக்கால்,
பாம்புக்கால். (236) 
மென்றொடர்க்
குற்றுகரம் 
396. அவற்றுள், 
     மென்றொடர் மொழியுட்
சிலவேற் றுமையிற் 
     றம்மினம் வன்றொட ராகா
மன்னே. 
			
				
				 |