எழுத்ததிகாரம்109முத்துவீரியம்

(இ-ள்.) முற்கூறியவற்றுள் மென்றொடர் மொழிக் குற்றியலுகரங்களுட்
சிலவேற்றுமைக்கண் தமக்கினமாகிய வன்கணமாகி மிக்குமுடியும்.

(வ-று.) குரங்கு + கால் = குரக்குக்கால். (237)

மரப்பெயர்

397. மரப்பெயர்க் கிளவி யம்மொடு சிவணும்.

(இ-ள்.) குற்றியலுகர மரப்பெயர்மொழி அம்முச்சாரியை பெறும்.

(வ-று.) அரசு + காய் = அரசங்காய். (238)

தேங்காய்

398. தெங்குநீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின்.1

(இ-ள்.) மென்றொடர்மொழிக் குற்றுகரமாகிய தெங்கென்னும் மரப்பெயருக்குமுன்
காயென்னுஞ் சொல்வரின் முதல் நீண்டு ஈற்றுயிர் மெய்கெடும்.

(வ-று.) தெங்கு + காய் = தேங்காய் எனவரும். (239)

மரப்பெயர்

399. மெல்லொற்று வலியா மரப்பெய ருளவே.2

(இ-ள்.) மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாத மரப்பெயர்களுஞ் சிலவுளவாம்.

(வ-று.) புன்கங்கோடு. (240)

நெடிற்றொடர், வன்றொடர்க் குற்றுகரம்

400. நெடிற்றொடர் வன்றொட ரிற்சில அம்மிடை
     வரற்கு முரியன வாகு மென்ப.

(இ-ள்.) நெடிற்றொடர்க் குற்றியலுகரம் வன்றொடர் மொழிக் குற்றிய லுகரங்களிற் சில
அம்முச்சாரியை நடுவில் வருதற்கு முரியனவாம்.

1. நன் - எழுத் - உயிரீற் - 37.

2. தொல் - குற்றிய - 11.