எழுத்ததிகாரம்110முத்துவீரியம்

(வ-று.) ஏறு + கோடு = ஏறங்கோடு; புற்று + சோறு = புற்றஞ்சோறு. (241)

அக்குச் சாரியை பெறும் குற்றுகரம்

401. அக்கொடு வரூஉ மொழியுமா ருளவே.

(இ-ள்.) அக்குச்சாரியை பெற்றுவரும் குற்றியலுகர மொழிகளுமுளவாம்.

(வ-று.) குன்றக்கூகை. (242)

எண்ணுப் பெயர்

402. எண்ணுப் பெயரெலா மன்னொடு சிவணும்.

(இ-ள்.) குற்றியலுகர எண்ணுப்பெயரெல்லாம் அன்சாரியைப் பெறும்.

(வ-று.) ஒன்றன்கூட்டம்

பிறவுமன்ன. (243)

வண்டும் பெண்டும்

403. 1வண்டும் பெண்டு மின்னொடு சிவணும்.

(இ-ள்.) வண்டென்னும் பெயரும் பெண்டென்னும் பெயரும் இன்சாரியை பெறும்.

(வ-று.) வண்டின்கால், பெண்டின்கை. (244)

பெண்டென் கிளவி

404. அவற்றுள்,
     பெண்டன் னொடுவரூஉம் பெற்றித் தாகும்.

(இ-ள்.) மேற்கூறிப் போந்தவற்றுள், பெண்டென்னுமொரு பெயர் அன்சாரியையும்
பெறுமென்க.

(வ-று.) பெண்டன்கால் எனவரும்.

(வி-ரை.)

‘பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார்’ (குற்றிய - 16)

என்பது தொல்காப்பியம். (245)

1. தொல் - எழுத் - குற்றிய - 15.