எழுத்ததிகாரம்111முத்துவீரியம்

யாதும் ஆய்தப் பெயரும்

405. யாது மாய்தச் சுட்டு மன்பெறும்
     ஆவயி னாய்த மழியுஞ் சுட்டே.

(இ-ள்.) யாதென்னும் வினாப்பெயரும் ஆய்தச் சுட்டுப் பெயரும் அன்சாரியை பெறும்,
ஆயிடைச் சுட்டின் முன்னாகிய ஆய்தங் கெடும்.

(வ-று.) யாது + கோடு = யாதன்கோடு; அஃது + கோடு = அதன்கோடு, இஃது +
கோடு = இதன்கோடு, உஃது + கோடு = உதன்கோடு. (246)

ஆய்தப்புள்ளி நிற்கும் இடம்

406. ஆவிவரி னிலையும் ஆய்தப் புள்ளி.

(இ-ள்.) உயிர்முதன் மொழிவரின் ஆய்தம் நிலைபெறுமென்க.

(வ-று.) அஃதடை, இஃதடை, உஃதடை.

(வி-ரை.)

‘முன்உயிர் வருமிடத் தாய்தப் புள்ளி
மன்னல் வேண்டும் அல்வழி யான’ (குற்றிய - 18)

என்பது தொல்காப்பியம். (247)

407. ஏனைய கணம்வரின் இலவா கும்மே.

(இ-ள்.) உயிர்க்கணமல்லாத வன்கண மென்கணம் இடைக் கணங்களுக்குமுன்
ஆய்தநிலை பெறாவாம்.

(வ-று.) அஃது + கடிது = அதுகடிது, அதுமெலிது, அதுவலிது. (248)

408. அல்வழிக் கண்ணெலா மிகாதியல் பாகும்.

(இ-ள்.) அல்வழிக்கண் ஆறீற்றுக் குற்றுகரமும் மிகாது இயல்பாகும்.

(வ-று.) நாகுகடிது, எஃகுகடிது, வரகுகடிது, தெள்குகடிது, குரங்குகடிது. (249)

409. வல்லெழுத் தியையின் வன்றொடர் மிகுமே.