எழுத்ததிகாரம்115முத்துவீரியம்

ஒன்றுமுதல் ஒன்பதன்முன் பத்து

420. ஒன்று முதலொன் பான்முற் பத்திடை
     மெய்கெட வாய்த மாறல்லா வழியே.

(இ-ள்.) ஒன்றுமுதல் ஒன்பதீறாகக் கிடந்த எண்ணுப் பெயர்களின் முன்னின்ற
பத்தினிடை யொற்றுக்கெட ஆய்தம் பெறும் ஆறென்னு மெண்ணொழிய.

(வ-று.) ஒருபஃது, இருபஃது, முப்பஃது பிறவுமன்ன. (261)

எண்ணுப் பெயர்களுள் நீண்டும் குறுகியும் வருவன

421. ஒன்று முதலெட் டீறா மெண்ணுள்
     முதலீ ரெண்முத னீளுமூன் றாறேழ்
     குறுகு மாறே ழல்ல வற்றின்
     ஈற்றுயிர் மெய்யு மேழ னுயிரும்
     ஏகு மேற்புழி யென்மனார் புலவர்.1

(இ-ள்.) ஒன்றுமுத லெட்டீறாகிய வெண்களுள் ஒன்றும் இரண்டும் முதனீளும், ஆறும்
ஏழும் முதல் குறுகும், ஆறும் ஏழுமல்லாத எண்களின் இறுதி யுயிர்மெய்யும் ஏழனுயிருங்
கெடுமெனவறிக.

(வ-று.) ஒன் = ஓன்; இரண் = ஈரண்; மூன் = முன், ஆறு = அறு, ஏழ் = எழ். (262)

ஒன்றும் இரண்டும்

422. ஒன்ற னொற்றே ரகார மாகும்
     இரண்ட னொற்றுயி ரேகவுவ் வருமே.

(இ-ள்.) ஒன்றென்னும் எண்ணின் மெய் ரகரமெய்யாகும், இரண்டென்னும் எண்ணின்
மெய்யும் உயிருங்கெட உகரச்சாரியை வரும்.

(வ-று.) ஒருபது, இருபது. (263)

மூன்று

423. மூன்றன் மெய்யே பகார மாகும்.

1. நன் - எழுத் - உயிரீற் - 38.