எழுத்ததிகாரம்116முத்துவீரியம்

(இ-ள்.) மூன்றென்னும் எண்ணின்கணின்ற னகரமெய் பகரமெய்யாகத் திரியும்.

(வ-று.) முப்பது. (264)

நான்கு

424. நான்கன் மெய்யே றகார மாகும்.

(இ-ள்.) நான்கென்னும் எண்ணின்கணின்ற னகரமெய் றகர மெய்யாகத் திரியும்.

(வ-று.) நாற்பது. (265)

ஐந்து

425. ஐந்த னொற்றே மகார மாகும்.1

(இ-ள்.) ஐந்தென்னும் எண்ணின்கணின்ற நகரமெய் மகர மெய்யாகத் திரியும்.

(வ-று.) ஐம்பது. (266)

எட்டு

426. எட்ட னுடம்புணவ் வாகு மென்ப.2

(இ-ள்.) எட்டென்னும் எண்ணின்கணின்ற, டகரமெய் ணகர மெய்யாகத் திரியும்.

(வ-று.) எண்பது. (267)

வருமொழி வரையறை

427. பத்து முன்வருங் காலை யான.

(இ-ள்.) பத்தென்னும் எண்ணுப்பெயர் வருங்காலென்க.

(வி-ரை.) 422 முதல் 426 வரையுள்ள நூற்பாக்களுக்கு வருமொழி கூறுவது
இந்நூற்பாவாகும். (268)

1. தொல் - எழுத்து - குற்றிய - 37.

2. நன்: எழுத் - உயிரீற் - 43.