எழுத்ததிகாரம் | 117 | முத்துவீரியம் |
எண்ணுப்பெயர்முன் அளவும்
நிறையும்
428. அளவு நிறையும்
வரினியல் பாகும்.
(இ-ள்.) அளவுப்பெயரு
நிறைப்பெயரும் வரின் இயல்பாம்.
(வ-று.) ஒருகலம், ஒருகழஞ்சு,
இருகலம். (269)
மூன்றன்புள்ளி
429. மூன்றன் புள்ளி வந்தது
மாகும்.
(இ-ள்.) மூன்றென்னும்
எண்ணின்கண் நின்ற னகரமெய் வந்த மெய்யாகத்
திரியும்.
(வ-று.) முக்கலம்,
முக்கழஞ்சு எனவரும். (270)
ஐந்தனொற்று
430. ஐந்த னொற்றே
மெல்லெழுத் தாகும்.1
(இ-ள்.) ஐந்தென்னும்
எண்ணின்கண் நின்ற நகரமெய் வருமொழி வல்லெழுத்துக்
கேற்ற
மெல்லெழுத்தாகத் திரியும்.
(வ-று.) ஐங்கலம்,
ஐங்கழஞ்சு. (271)
இதுவுமது
431. வல்லெழுத்து வரூஉங்
காலை யான.
(இ-ள்.) க, ச, த பக்கள்
வருங்கால் எனவறிக. (272)
ஐந்தும் மூன்றும்
432. ஐந்தும் மூன்றும் நமவரு
காலை
ஒற்றிய னிலைகெட வந்தது
மாகும்.
(இ-ள்.) ஐந்தென்னும்
எண்ணும் மூன்றென்னும் எண்ணும், நகர மகரங்கள்
வருங்கால்
வந்த மெய்யாகத் திரியும்.
(வ-று.)
ஐந்நாழி=ஐம்மண்டை; முந்நாழி=மும்மண்டை. (273)
1. தொல் - எழுத் - குற்றிய
- 42.
|