எழுத்ததிகாரம்119முத்துவீரியம்

வருமொழிக்குக் கூறிய வியல்பாக மூன்றுக்கு வகரமும், நான்குக்கு லகரமும் ஐந்து
கெடுதலுமாம்.

(வ-று.) முவ்வகல், நாலகல், ஐயகல் எனவரும். (278)

மூன்றன்முன் உழக்கு

438. உழக்கு வரின்முத னீளுமூன் றெண்ணே.

(இ-ள்.) உழக்கென்னுஞ் சொல்வரின் மூன்றென்னுமெண் முதனீளும்.

(வ-று.) மூவுழக்கு எனவரும். (279)

ஆறு

439. ஆறுமவ் வியல்பிற் றாகும்.

(இ-ள்.) ஆறென்னும் எண்ணும் முதனீளும்.

(வ-று.) ஆறகல். (280)

ஒன்பது

440. ஒன்பா னின்னொடும் ஒழுகு மென்ப.

(இ-ள்.) ஒன்பதென்னும் எண்ணுப் பெயர் இன் சாரியை பெறுமென்க.

(வ-று.) ஒன்பதின்கலம். (281)

எண்ணுப் பெயர்முன் நூறு

441. நூறென் கிளவி வரினியல் பாகும்.

(இ-ள்.) நூறென்னும் எண்ணுப்பெயர் வரின் இயல்பாகும்.

(வ-று.) ஒருநூறு, இருநூறு. (282)

மூன்றன் மெய்

442. மூன்றன் மெய்யே நகார மாகும்.

(இ-ள்.) மூன்றென்னும் எண்ணின்கண் நின்ற னகரமெய் நகரவொற்றாகத் திரியும்.