| எழுத்ததிகாரம் | 13 | முத்துவீரியம் |  
  
சுட்டெழுத்து 
26. அ, இ, உச்சுட் டாமென
மொழிப. 
(இ-ள்.) அவன் என அகரமும்,
இவன் என இகரமும், உவன் என உகரமும் தனித்துச் 
சுட்டுப்பொருளைத் தரின் சுட்டெழுத்தாமென்க. (26) 
வினாவெழுத்து 
27. எயா வினாவென்
றிசைக்கப் படுமே. 
(இ-ள்.) எவன் என எகரமும்,
யாவன் என யாகாரமும் தனித்து வினாப்பொருளைத் 
தரின் வினாவெழுத்தாகும். (27) 
ஆய்தத்தின் மறு
பெயர்கள் 
28. அஃகேனந் தனிநிலை
யாய்த மாகும். 
(இ-ள்.) அஃகேனம் எனினும்
தனிநிலை எனினும் ஆய்தம் எனினும் ஒரு 
பொருட்கிளவி. (28) 
சுட்டென்பதின் மறு
பெயர்கள் 
29. காட்டல்
குறித்தல்சுட் டாங்கரு திடினே. 
(இ-ள்.) காட்டலெனினும்,
குறித்தலெனினும், சுட்டென்னும் ஒருபொருட்கிளவி.
(29) 
வினாவென்பதின் மறு
பெயர்கள் 
30. வினவல் கடாவல்
வினாவெனப் படுமே. 
(இ-ள்.) வினவல் எனினும்
கடாவல் எனினும் வினாவென்னும் ஒருபொருட் 
கிளவியாமெனவறிக. (30) 
அளபெடை 
31. இசைகெடி னெட்டெழுத்
தெல்லாந் தமக்கினம் 
    ஆகிய குறிலொடு மளபெழு
மெனலே. 
(இ-ள்.) பாட்டின் ஓசை
கெடவரின் நெட்டுயிரேழும் தமக்கினமாகிய
குற்றுயிரோடு ‘ஆ 
அ வலவன்’, ‘ஈ இரிரை’ 
			
				
				 |