சொல்லதிகாரம் | 131 | முத்துவீரியம் |
உயர்திணைப் பெண்பாற்
பெயர்கள்
479. உரைத்த குடிமுத லுற்ற
ளகார
ஈற்றவு மிகர விறுதிக்
கிளவியும்
அத்திணைப் பெண்பாற் படர்க்கை யாகும்.
(இ-ள்.) மேற்கூறிப்போந்த குடிப்பெயர்
முதலிய பத்துப் பெயர்களினிறுதி,
ளகரவொற்றுப் பெயரும்,
இகரவிறுதிப் பெயரும் உயர்திணைப் பெண்பாற் படர்க்கைப்
பெயராம்.
(வ-று.) சோழியள்,
சேரமாள், அவையத்தாள், வருவாள், வெற்பள், திணிதோளாள்,
கறுப்பி, ஒருத்தி, அவள், இவள்,
உவள், எவள், யாவள் எனவரும். (22)
இதுவுமது
480. தையன் மகடூஉ நங்கை செவிலி
தோழியு மதன்பால
வென்மனார் புலவர்.
(இ-ள்.) தையல், மகடூஉ,
நங்கை, செவிலி, தோழி உயர் திணைப் பெண்பாற்
படர்க்கைப் பெயராம்.
(வி-ரை.)
‘கிளைமுத லாகக் கிளந்த
பொருள்களுள்
ளவ்வொற் றிகரக் கேற்ற வீற்றவும்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையலோ டின்னன பெண்பாற்
பெயரே’ (நன்-பெயரியல்-20)
என்று நன்னூற்
கருத்துக்கள் மேலைய நூற்பாவிலும் இந்நூற்பாவிலும்
இடம் பெற்றுள்ளன.
(23)
உயர்திணைப் பலர்பாற்
பெயர்கள்
481. குடிமுத லாகக்
குறித்தவற் றிறுதி
ரகாரைப் பெயரு மாரைக்
கிளவியும்
உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயரே.
(இ-ள்.) குடிமுதலாகக் கருதிய
பெயர்களினிறுதி ரகர வொற்றுப் பெயரும் மார்விகுதிப்
பெயரும் உயர்திணைப் பலர்பாற் படர்க்கைப் பெயராம்.
|