சொல்லதிகாரம் | 132 | முத்துவீரியம் |
(வ-று.) சோழியர், சேரலர்,
அவையத்தார், வருவார், வெற்பர், திணிதோளர், கரியர்,
இருவர், அவர், இவர், உவர், எவர், யாவர், கொண்மார். (24)
அஃறிணை ஒன்றன்பாற்
படர்க்கைப் பெயர்கள்
482. துவ்விறு சுட்டொடு சுட்டணை யாய்தமும்
யாது மொன்று மஃறிணை யொன்றன்
பாற்படர்க் கைப்பெய ரென்மனார் புலவர்.
(இ-ள்.) துவ்விகுதிச்
சுட்டுப்பெயரும், சுட்டணை யாய்தப் பெயரும், யாதென்னும்
வினாப்பெயரும், ஒன்றென்னு மெண்ணுப்
பெயரும், அஃறிணை ஒன்றன்பாற் படர்க்கைப்
பெயராமென்க.
(வ-று.) அது, இது, உது, அஃது,
இஃது, உஃது, ஒன்று, யாது எனவரும்.
(வி-ரை.)
‘வினாச்சுட் டுடனும் வேறு
மாம்பொருள்
ஆதி யுறுதுச் சுட்டணை யாய்தம்
ஒன்றனெண் ணின்னன
வொன்றன் பெயரே’’ (பெயரி - 22)
என்பது நன்னூல். (25)
அஃறிணைப் பலவின்பாற்
பெயர்கள்
483. வகார விறுதியும் வையிறு மொழியுங்
கள்ளெ னிறுதியுங் கணக்கும் பிறவும்
அத்திணைப் பலவின் படர்க்கைப் பெயரே.
(இ-ள்.) வகரவொற்
றிறுதியாகிய பெயரும், வைவிகுதிப் பெயரும், கள்ளிறுதிப்
பெயரும், எண்ணுப் பெயரும், இவை
போல்வன வாகிய பிறபெயரும் அஃறிணைப்
பலவின்பாற் படர்க்கைப் பெயராம்.
(வ-று.) அவ் - இவ் - உவ்,
அவை - இவை - உவை, நரிகள் - புலிகள், இரண்டு -
மூன்று -
நான்கு - ஐந்து -ஆறு - ஏழு. (26)
இதுவுமது
484. பல்ல பலசில வென்னும்
பெயரும்
உள்ள வில்ல வுளவில வென்னும்
பெயரு மத்திணைப் பலவின் மேன.
|