சொல்லதிகாரம் | 133 | முத்துவீரியம் |
(இ-ள்.) பல்ல - சில்ல, பல -
சில, உள்ள - இல்ல, உள - இல அஃறிணைப்
பலவின்பாற்
படர்க்கைப் பெயராம்.
(வி-ரை.)
‘முன்ன ரவ்வொடு வருவை
அவ்வும்
சுட்டிறு வவ்வுங் கள்ளிறு
மொழியும்
ஒன்ற லெண்ணு முள்ள வில்ல
பல்ல சில்ல வுளவில பலசில
இன்னவும் பலவின் பெயரா
கும்மே’ (பெயரி - 23)
என்ற நன்னூற்
கருத்துக்கள் மேலைய நூற்பாவிலும் இந்நூற்பாவிலும்
இடம் பெற்றுள்ளன.
(27)
இருதிணைப் பொதுப்பெயர்
485. சினைப்பெயர்
முதற்பெயர் சினைமுதற் பெயரே
முறைப்பெயர் தன்மை
முன்னிலைப் பெயரே
எல்லாம் பொதுப்பெய
ரென்மனார் புலவர்.
(இ-ள்.) சினைப்பெயரும்,
முதற்பெயரும், சினைமுதற்பெயரும், முறைப்பெயரும்,
தன்மைப் பெயரும், முன்னிலைப் பெயரும்,
எல்லாமென்னும் பெயரும் இருதிணைக்கும்
பொதுவாகிய பெயராம். (28)
அதன் வகை
486. அவற்றுள்,
சினைப்பெயர் நான்கே
சினைமுதற் பெயரொரு
நான்கே யியற்பெயர்
நான்கே முறைப்பெயர்
ஓரிரண் டென்மனா
ருணர்ந்திசி னோரே.
(இ-ள்.) சினைப்பெயர் நான்கு, சினைமுதற்பெயர்
நான்கு, இயற்பெயர் நான்கு,
முறைப்பெய ரிரண்டாகும். (29)
சினைப்பெயர்
487. ஆண்மைச் சினைப்பெயர் பெண்மைச் சினைப்பெயர்
ஒருமைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர்
அந்நான் கென்ப சினைப்பெயர்க் கிளவி.
|