சொல்லதிகாரம் | 135 | முத்துவீரியம் |
(வ-று.) தந்தை - ஆண்மை
முறைப்பெயர், தாய் - பெண்மை முறைப்பெயர். (33)
அவை இருதிணையிலும்
தத்தம் பால் ஏற்றல்
491. ஒன்றே யிருதிணைத்
தன்பா லேற்கும்.
(இ-ள்.) முதற்பெயர்
முதலாகக் கூறப்படு மிருபத்தாறும் பிறவுமாகிய
பொதுப்பெயர்களுள் ஒவ்வொன்றே இருதிணையிலுந் தன்றன்பாலை
யேற்றுவரும்.
(வ-று.) சாத்தன் வந்தான்,
சாத்தன் வந்தது, தாயிவள், தாயிப்பசு, பிறவுமன்ன.
(வி-ரை.) நன்னூலில்
அவற்றுள் என்ற தனிச்சொல்லுடன் இந்நூற்பா
காணப்படும். (34)
பெண்மைப் பெயர்
492. மகடூஉக் குறித்த வெல்லாப் பெயரும்
ஒன்றற்கு மொருத்திக்கு
மொன்றிய நிலையே.
(இ-ள்.)
பெண்மையைப்பற்றி வருகிற நான்கு பெயரும், அஃறிணை
யொன்றற்கும்,
உயர்திணை யொருத்திக்கு
முரியவாம்.
(வ-று.) சாத்தி வந்தது -
சாத்தி வந்தாள், முடத்தி வந்தது - முடத்தி வந்தாள்
பிறவுமன்ன. (35)
ஆண்மைப் பெயர்
493. ஆடூஉக் குறித்த வெல்லாப் பெயரும்
ஒன்றற்கு மொருவற்கு
மொன்றிய நிலையே.
(இ-ள்.) ஆண்மையைப்பற்றி
வருகிற நான்கு பெயரும் அஃறிணை யொன்றற்கும்,
உயர்திணை யொருவனுக்கு முரியவாம்.
(வ-று.)
சாத்தன்வந்தது-சாத்தன்வந்தான், முடவன் வந்தது -
முடவன் வந்தான். (36)
பன்மைப் பெயர்
494. பன்மையைக் குறித்த பெயரெல் லாமும்
ஒன்று பலவொரு மைக்கு
முரிய.
(இ-ள்.) பன்மையைப்பற்றி
வருகிற மூன்று பெயரும், அஃறிணை யொருமைக்கும்
அத்திணைப் பன்மைக்கும் உயர்திணை
|