சொல்லதிகாரம் | 137 | முத்துவீரியம் |
(வ-று.) கோதை வந்தது,
கோதை வந்தான், கோதை வந்தாள். (38)
தாம்
496. தாமெனு மொருபெயர்
பன்மைக் குரிய.
(இ-ள்.) தாமென்னும் பெயர்
இருதிணைக்கண்ணும் பன்மைப்பாற் குரியவாம்.
(வ-று.) தாம் வந்தார்,
தாம் வந்தன. (39)
தான்
497. தானெனு மொருபெய
ரொருமைக் குரிய.
(இ-ள்.) தானென்னும் பெயர்
இருதிணைக்கண்ணும் ஒருமைப்பாற் குரியவாம்.
(வ-று.) தான் வந்தான்,
தான் வந்தது. (40)
எல்லாம்
498. எல்லா மென்ப
திருதிணைப் பன்மைப்
பெயரொடு நிலையும்
பெற்றித் தாகும்.
(இ-ள்.) எல்லாமென்னும்
பெயர் இருதிணைக்கண்ணும் பன்மையைக் குறித்துவரும்.
(வ-று.) எல்லாம் வந்தேம்,
எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தன. (41)
நீயிர், நீ
499. நீயிர்நீ பாறெளி
விலவா மென்ப.
(இ-ள்.) நீயிர் - நீயென்னு
மிரண்டு பெயரும், திணைப்பகுதி தெரிய நில்லாவாம்;
இருதிணையும் உடன்றோன்றும் பொருளவாம்.
(வ-று.) நீயிர் வந்தீர்,
நீ வந்தாய் என இருதிணைக்கும் பொதுவாய் நின்றமை
காண்க.
(42)
நீ
500. அவற்றுள்,
நீயென் கிளவி யொருமைக்
குரிய.
|