சொல்லதிகாரம் | 138 | முத்துவீரியம் |
(இ-ள்.)
மேற்கூறிப்போந்த இரண்டனுள், நீயென்னும்
ஒருபெயர் ஒருமைக்குரியவாம்.
(வ-று.) நீ வந்தாய்
எனவரும். (43)
நீயிர்
501. நீயி ரெனும்பெயர்
பன்மையொடு நிலையும்.
(இ-ள்.) நீயிரென்னும்
ஒருபெயர் பன்மைக்குரியவாம்.
(வ-று.) நீயிர் வந்தீர்
எனவரும். (44)
ஒருவர்
502. 1 ஒருவ ரென்ப துயரிரு
பாற்றாய்ப்
பன்மை வினைகொளும்
பாங்கிற் றென்ப.
(இ-ள்.) ஒருவரென்னும்
பெயர் உயர்திணை முப்பாலுள் ஒருபால் விளக்காது
ஒருவனொருத்தியென்னும் இருபாற்கும் பொதுவாய்
நிற்கும்.
(வ-று.) ஒருவர் வந்தார். (45)
நீயிர், நீ, ஒருவர்
என்பன பாலுணருமாறு
503. இன்ன பெயரே யிவையெனல் வேண்டின்
2 முன்னஞ் சேர்த்தி முறையா னுணர்க.
(இ-ள்.) நீயிர், நீ,
ஒருவர் என்பனவற்றை இன்னபாற்பெயர் என்றறியலுறிற்
சொல்லுவான் குறிப்பொடு கூட்டி
முறையானறிக.
(வ-று.) ஒரு சாத்தன்
ஒருவனானும், ஒருத்தியானும், பலரானும், ஒன்றானும்
பலவானும்
தன்னுழைச் சென்ற வழி, நீ வந்தாய்,
நீயிர் வந்தீரென்னுமன்றே ஆண்டு அது கேட்டான்
இவன் இன்னபால் கருதிக் கூறினான் என்பது உணரும்.
(46)
பெண்மகள்
504. பெண்மக ளென்னும்
பெயர்வினை கொள்ளுங்
காலதற் குரிய வினையொடு
சிவணும்.
1. நன் - சொல் - பெயரி -
32.
2. முன்னஞ் சேர்த்தி
முறையின் உணர்தல் என்பது தொல்காப்பியம்.
|