சொல்லதிகாரம்139முத்துவீரியம்

(இ-ள்.) பெண்மக ளென்னும்பெயர் வினைகொள்ளுங்கால் பெண்மைக்குரிய
வினைகொள்ளும்.

(வ-று.) பெண்மகள் வந்தாள் எனவரும். (47)

செய்யுட்கண் ஆகாரம் ஓகாரமாதல்

505. யாப்பினுள் ஆ, ஓ வாகலு முளவே.

(இ-ள்.) செய்யுளுள் ஆகாரம் ஓகாரமாய்த் திரிதலுமுளவா மென்க.

(வ-று.) வில்லான், வில்லோன், தொடியான், தொடியோன், நல்லார், நல்லோர்.

(வி-ரை.)

‘பெயர்வினை யிடத்து னளரய ஈற்றயல்
ஆஓ ஆகலும் செய்யுளுள் உரித்தே’ (பொது - 2)

என்ற நன்னூல் நூற்பாவைக் கொண்டு இதன் கருத்தை நன்கறியலாம்.
எடுத்துக்காட்டில் னளர ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆதற்கு மட்டுமே உள்ளன.
‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ (அகம் - 80) என்பதால் யகர ஈற்றயலும் ஆ
ஓவாகும் என அறியலாம். (48)

பெயர்ச்சொல் வேற்றுமை ஏற்றல்

506. எல்லாப் பெயரும் வேற்றுமை யேற்கும்.

(இ-ள்.) பெயர்ச்சொல்லெல்லாம் வேற்றுமை பெறும். (49)

வேற்றுமை எட்டு

507. வேற்றுமை தானே விளியோ டெட்டே.

(இ-ள்) விளிவேற்றுமையோடு வேற்றுமை யெட்டாகும். (50)

வேற்றுமை யுருபுகள்

508. பெயரை யொடுகுவ் வின்னது கண்விளி.

(இ-ள்.) எட்டெனக்கூறிய வேற்றுமையாவன பெயரும், ஐயும், ஒடுவும், குவ்வும்,
இன்னும், அதுவும், கண்ணும் விளியுமா மென்க. (51)