எழுத்ததிகாரம் | 14 | முத்துவீரியம் |
(காரிகை - மேற்கோள்)
எனத் தன்மாத்திரையின் மிகுந்தொலிக்கு மென்க.
(31)
அதன் வகை
32. அதுதான்
இயற்கை செயற்கை
யின்னிசை சொல்லிசை
நெடில்குறில் ஒற்றள பெழுத்துப் பேறளபு
எண்வ கைப்படும் என்மனார் புலவர்.
(இ-ள்.) அவ்வளபெடை
இயற்கையளபெடை, செயற்கை யளபெடை, இன்னிசை
யளபெடை, சொல்லிசை யளபெடை, நெடிலளபெடை,
குறிலளபெடை, ஒற்றளபெடை,
எழுத்துப் பேறளபெடை என
எட்டுவகைப்படும்.
(வ-று.) அழைத்தல்
விலைகூறல், புலம்பல் எழுத்துச் செயற்கையின்றிப்
பிறந்தது
இயற்கை யளபெடை. செய்யுளில் சீர் தளை
கெட்ட விடத்துப் புலவன் கொள்ளுதல்
செயற்கை
யளபெடை கெடுப்பதூஉம். (குறள் - வான் சிறப்பு)
குற்றுகரமளபெடுத்த இன்னிசை
யளபெடை. அளைஇ (குறள் -
இனியவை கூறல்) ஐகாரக்குறுக்க மளபெடுத்த
சொல்லிசை
யளபெடை. ஆ அ நெடிலளபெடை. மணீ இ. குற்றெழுத்து நெட்டெழுத்தாகி
யளபெடுத்த
குறிலளபெடை. சிந்ந்து ஒற்றளபெடை. சந்திரனை யராஅப்
பற்றிற்று விகாரத்தெழுந்த
எழுத்துப் பேறளபெடை என வந்தமை காண்க. (32)
அளபெடையின் மறு
பெயர்கள்
33. அளபும் புலுதமு மளபெடைப்
பெயரே.
(இ-ள்.) அளபெனினும்,
புலுதமெனினும், அளபெடையென்னும் ஒரு பொருட்கிளவி.
(33)
குற்றியலிகரம்
34. யகரம் வரும்வழி
யிகரங் குறுகும்.
(இ-ள்.) யகரமுதன்
மொழிவரக் குற்றியலுகரம் திரிந்த இகரம் தன்
மாத்திரையில்
குறுகும்.
(வ-று.) ஆகி யாது, எஃகி யாது,
வரகி யாது, கொக்கி யாது, சங்கி யாது, தெள்கி யாது,
சுண்ணாம் பியாது. (34)
இதுவுமது
35. அசைச்சொன் மியாவி
னிகரமு மற்றே.
|