சொல்லதிகாரம்143முத்துவீரியம்

(வ-று) கள்ளரினஞ்சும், வாணிகத்தினாயினான், ஊரிற்றீர்ந்தான், காமத்திற்
பற்றுவிட்டான், மலையின் வீழருவி, காக்கையிற்கரிது களம் பழம், மதுரையின் வடக்குச்
சிதம்பரம், கல்வியிற் பெரியன் கம்பன் எனவரும். (63)

ஆறாம் வேற்றுமை

521. ஒருமைக் கதுவு மாதுவும் பன்மைக்
     கவ்வு மாறா வதற்குரு பாகும்.

(இ-ள்.) ஆறாம் வேற்றுமை யுருபாவது ஒருமைக்கு அதுவும், ஆதுவும், பன்மைக்கு
அகரமும் ஆகுமென்க. (64)

அதன் பொருள் நிலை

522. அதன்பொருள் குணமுறுப் பொன்றன் கூட்டந்
     திரிபி னாக்கமொடு பலவி னீட்டம்
     ஆந்தற் கிழமையும் பிறிதின் கிழமையும்
     ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.

(இ-ள்.) பண்பும், அவயவமும், ஒருபொருட் கூட்டமும், ஒன்றுதிரிந் தொன்றாகலும்,
பலபொருட் கூட்டமும் ஆகிய வைந்து தற்கிழமைப் பொருள்களையு மவையல்லாத பிறிதின்
கிழமைப் பொருள்களையு முடையனவாக அவ்வுருபுகளை யேற்ற பெயர்ப்பொருள்கள்
வேறுபட்ட இவ்விருவகைச் சம்பந்தப் பொருள்களுமா மென்க.

(வ-று.) சாத்தனது கருமை, நெல்லது குப்பை, நெல்லினது பொரி, பறவைகளது
கூட்டம், தற்கிழமை; சாத்தனது பசு, பொருள்; சாத்தனது வீடு, இடம்; சாத்தனது நாள், காலம்;
மூவகைப் பிறிதின்கிழமை, எனாது கை, தனகைகள்.

(வி-ரை.) மேலைய நூற்பாவும் இந் நூற்பாவும்,

‘ஆற னொருமைக் கதுவு மாதுவும்
பன்மைக் கவ்வு முருபாம் பண்புறுப்
பொன்றன் கூட்டம் பலவி னீட்டம்
திரிபி னாக்க மாம்தற் கிழமையும்
பிறிதின் கிழமையும் பேணுதல் பொருளே’ (பெயர்-43)

என்னும் நன்னூற் கருத்தைத் தழுவியனவாகும். (65)

ஏழாம் வேற்றுமை

523. கண்முத லியனவே ழனதுரு பாகும்.