சொல்லதிகாரம் | 144 | முத்துவீரியம் |
(இ-ள்.) ஏழாம் வேற்றுமை
யுருபாவது கண் முதலியனவாம். (66)
அதன் பொருள் நிலை
524. அதன்பொருள்
பொருண்முத லாறிரு கிழமையின்
இடனாய் நிற்ப
தென்மனார் புலவர்.
(இ-ள்.) பொருளும், இடமும்,
காலமும், சினையும், குணமும், தொழிலும் ஆறும்
தற்கிழமைப் பொருள் பிறிதின் கிழமைப்
பொருள்களுக்கும் இடமாய் நிற்கின்ற வுருபேற்ற
பெயர்ப்பொருள் வேறுபட்ட அவ்விடப் பொருணிலையாம்.
(வ-று.) மணியின்க ணிருக்கின்றதொனி - தற்கிழமை. பனையின் கண்
வாழ்கின்ற
தன்றில் - பிறிதின் கிழமை; பொருள்
ஊரின்கணிருக்கு மில்லம் - தற்கிழமை.
ஆகாயத்தின்கட் பறக்கின்றது பருந்து - பிறிதின்
கிழமை; இடம். நாளின்கணாழிகையுள்ளது
-
தற்கிழமை.
வேனிற்கட் பாதிரிபூக்கும் - பிறிதின்கிழமை;
காலம் கையின்கணுள்ளது
விரல் -
தற்கிழமை;
கையின்கண் விளங்குகின்றது. கடகம் -
பிறிதின்கிழமை. சினை.
கறுப்பின்
மிக்கதழகு -
தற்கிழமை. இளமையின்கண் வாய்த்தது செல்வம் -
பிறிதின்கிழமை;
பண்பு.
ஆடற்கணுள்ளது சதி - தற்கிழமை. ஆடற்கட் பாடப்பட்டது
பாட்டு; பிறிதின்
கிழமை.
தொழில்.
(வி-ரை.) மேலைய நூற்பாவும்
இந்நூற்பாவும்,
‘ஏழ னுருபுகண் ணாதி யாகும்
பொருண்முத லாறு மோரிரு கிழமையின்
இடனாய் நிற்ற
லிதன்பொரு ளென்ப’ (பெயர் - 44)
என்னும் நன்னூற்
கருத்தைத் தழுவியனவாகும். (67)
இதுவுமது
525. கண்கால் புறமக முள்ளுழை கீழ்மேல்
பின்சார யல்புடை தேவகை யெனாஅ
முன்னூ லிடைகடை வலமிட மெனாஅ
அன்ன பிறவு மதன்பால
வென்மனார்.
(இ-ள்.) கண் முதல் இடம்
ஈறாக் கூறிய பத்தொன்பதும் அவை போல்வன பிறவும்
ஏழாவதன்றிறத்தனவாம்.
(வ-று) கண்ணகல்,
ஊர்க்கால், ஊர்ப்புறம், எயிலகம், சில்லுள்,
அரசனுழை,
ஆலின்கீழ், மரத்தின்மேல், ஏர்ப்பின், காட்டுச்சார்,
உறையூர்க்கயல், எயிற்புடை, வடபால்,
புவிமுன், நூலினிடை, நூலின்கடை,
|