சொல்லதிகாரம்145முத்துவீரியம்

நூலின்றலை, கைவலம், தன்னிடம், அவ்விடப் பொருள்பற்றி ஏழாம் வேற்றுமை வந்தவாறு
காண்க.

(வி-ரை.) இவற்றை உருபென்பர் இளம்பூரணர், நன்னூலார் முதலியோர்,
சேனாவரையர் இதனை மறுத்து உருபின் பொருள்பட வந்த பிற சொற்கள் என்பர். (68)

வேற்றுமைத் தொகையும் அன்மொழித் தொகையும்

விரிந்து பொருள்படுதல்

526. 1 வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை
       ஈற்றினின் றியலுந் தொகைவயிற் பிரிந்து
       பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்
       எல்லாச் சொல்லு முரிய வென்ப.

(இ-ள்.) வேற்றுமைத் தொகைப் பொருளை விரிக்கு மிடத்து வேற்றுமையேயன்றி
அன்மொழித் தொகையும் விரிப்புழிப் பல்லாற்றா னன்மொழிப் பொருளோடு புணர்ந்துவரும்
எல்லாச் சொல்லும் விரிக்கப்படும்.

(வ-று.) தாழ்குழல் - தாழ்குழலையுடையாள், கருங்குழல் - கருங்குழலையுடைய
பேதை; பிறவுமன்ன.

(வி-ரை.) வேற்றுமைத் தொகையை விரிப்புழி இடையில் சிலசொற்கள் விரிந்து நின்று
பொருள்படுதல்போல அன்மொழித் தொகையை விரிப்புழியும் இறுதியில் சில சொற்கள்
விரிந்து நின்று பொருள் உணர்த்தும் என்பது இதன் கருத்து. (69)

சினைச் சொல்லிற்கு இரண்டும் ஏழும் உரித்தாதல்

527. சினைநிலைக் கிளவிக் கிரண்டு மேழும்
     வினைநிலை யொக்கு மென்மனார் புலவர்.

(இ-ள்.) சினைமேல் நிற்குஞ் சொல்லிற்கு இரண்டாவதும் ஏழாவதும்
வினைநிலைக்கணொக்கும்.

(வ-று.) கோட்டைக் குறைத்தான், கோட்டின்கட் குறைத்தான். (70)

கன்றலும் செலவும்

528. கன்றலிற் செலவி னொன்றுமார் வினையே.

1. தொல் - சொல் - வேற்றுமை - 22.