சொல்லதிகாரம் | 146 | முத்துவீரியம் |
(இ-ள்) கன்றற்
பொருண்மேல் வருஞ்சொல்லும், செலவுப் பொருண்மேல்
வருஞ்சொல்லும் இரண்டாவதற்கும் ஏழாவதற்குந் தொழிலாம்.
(வ-று.) சூதினைக் கன்றினான், சூதின்கட்
கன்றினான், நெறியைச் சென்றான், நெறிக்கட்
சென்றான். (71)
முதலும் சினையும்
529. முதற்கா றாயிற்
சினைக்கிரண் டாகும்.
(இ-ள்.) முதலுக்கு ஆறாம்
வேற்றுமை வருமாயிற் சினைக்கிரண்டாம் வேற்றுமை
வரும்.
(வ-று.) யானையது கோட்டைக்
குறைத்தான். (72)
இதுவுமது
530. முதலிவை சினையிவை
யெனவே றுளவில
உரைப்போர் குறிப்பின்
அற்றே பிண்டமும்.1
(இ-ள்.) முதற் பொருள்கள்
இவை சினைப் பொருள்கள் இவை யென்கிறதற்
கிரண்டாகப் பிரித்துச் சொல்வோரது குறிப்பின்
மாத்திரையனவேயாம், பிண்டப் பொருளும்
அத்தன்மைத்தாம்.
(வ-று.) யானையைக்
குறித்தபோது யானையுண்டாக அதனது கை கால் முதலியவை
வேறில்லையாம்; அவயவத்தைக் குறித்தபோது யானை
வேறில்லையா மாதலால் இவ்வாறு
கூறப்பட்டன. இனிப்
பிண்டப் பொருள் நெல்லைப் பொலியின்கண்
வாரினான் என்பது
பிண்டப் பொருளாகிய பொலிக்
குப்பையும் பிண்டித்த பொருளாகிய நெல்லும்
வேறாகாமையால் அவ்விரண்டிடத்தும் ஐயுருபு வருவது
சிறப்பன்றாம். (73)
ஒருவினை யொடுச்சொல்
531. மூன்றிற் கோதிய
வொருவினை யொடுச்சொல்
உயர்திணை யுணர்த்தும் பெயர்வழித் தோன்றும்.
(இ-ள்.) மூன்றாவதற்குக்
கூறிய ஒருவினையொடு மொழி உயர்திணைப்பொருளைத்
தெரிவிக்கும் பெயர்வழித் தோன்றும்.
(வ-று.) ஆசிரியனோடு
மாணாக்கர் வந்தார். (74)
1. நன் - பெயரியல் (314)
|