சொல்லதிகாரம் | 147 | முத்துவீரியம் |
ஆக்கமொடு புணர்ந்த ஏது
532. ஐந்தினு மூன்றினு மறையு மாக்கம்
ஒடுபுண ரேதுப் பெயர்ச்சொற் கிளவி
நோக்கு நோக்கொரு தன்மைய வாகும்.
(இ-ள்.) ஐந்தாம்
வேற்றுமைக் கண்ணும் மூன்றாம் வேற்றுமைக் கண்ணுங்
கூறிய
ஆக்கத்தோடு கூடிய ஏதுச்சொல் அவ்வேதுப் பொருண்மையை
நோக்கும் நோக்கு
ஒருதன்மையவாம்.
(வ-று.) வாணிகத்தி
னாயினான் - வாணிகத்தி னாயபொருள்; வாணிகத்தா
னாயினான்
-
வாணிகத்தா னாயபொருள். (75)
இரண்டன் நோக்கம்
533. இரண்ட னோக்கமு
மவற்றொடு நிலையும்.
(இ-ள்.) இரண்டாவதற்குக்
கூறிய நோக்கப் பொருண்மை நோக்கிய நோக்கமும்
ஐந்தாவதற்கும் மூன்றாவதற்குமுரிய ஏதுப்
பொருண்மையுமாம்.
(வ-று.) ‘வானோக்கி வாழு முலகெல்லா
மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி’
வானை நோக்கி வாழும்,
வானானோக்கி வாழும், வானினோக்கி வாழும்.
(வி-ரை.) நோக்கம் இருவகைப்படும்.
ஒன்று நோக்கிய நோக்கு. பிறிதொன்று நோக்கல்
நோக்கம் என்பது. முன்னையது கண்ணால் நோக்குதலைப் பொருளாக வுடையது.
பின்னையது
மனத்தால் நோக்குதலைப் பொருளாக
வுடையது.
ஈண்டு, வானோக்குதலும்,
கோல் நோக்குதலும் மனத்தாலாயது ஆதலின் இதுவே
நோக்கல் நோக்கம் எனப்படும். (76)
உயர்திணைக்கண் வரும்
நான்கனுருபும் ஆறனுருபும்
534. உயர்திணை மருங்கினா
லாறுமொத் தியலும்.
(இ-ள்.) உயர்திணைக்கண்
நான்காம் வேற்றுமையுருபும் ஆறாம் வேற்றுமையுருபும்
ஒரு
தன்மையவாம்.
(வ-று.) நம்பிக்கு மகன்,
நம்பியது மகன்.
(வி-ரை.) ஆறாம் வேற்றுமை
யுருபு அஃறிணைக்குரியது ஆதலின் “அதுவென்
வேற்றுமை
உயர்திணைத் தொகைவயின், அதுவென் உருபு கெடக்
குகரம் வருமே”
(வேற்றுமை மயங் - 11) என்பர் தொல்
|