சொல்லதிகாரம்148முத்துவீரியம்

காப்பியர். இவ்வாசிரியர் அம்மரபு மாற்றி ஆனும் நான்கும் ஒத்துவரும் என்கிறார். (77)

தடுமாறு தொழிற்பெயர்

535. இரண்டு மூன்றுந் தடுமாறு தொழில்வயிற்
     கடிநிலை யின்றே பொருள்வயி னான.

(இ-ள்.) இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் தனக்கே யுரித்தாய்
நில்லாது ஒருகாலீற்றுப் பெயரொடுஞ் சென்றும் தடுமாறுந் தொழிலொடு தொடர்ந்த
பெயர்க்குக் கடியப் படாவாம், அவ்வேற்றுமை தொக்க அவற்றின் பொருள் நிற்குந்
தொகைக்கண்.

(வ-று.) புலி கொன்றயானை, புலியைக் கொன்றயானை, புலியாற் கொன்றயானை.

(வி-ரை.) ‘புலிகொல் யானை’ என்ற தொடரில், கொல் என்பது வினையாம்;
அஃதாவது தொழிலாம். இச்சொல் முன்னர் இருக்கும் புலி என்னும் பெயர்க்கே யுரியதாகாது,
பின்னர் இருக்கும் யானை என்னும் பெயர்க்கும் உரியதாயிருத்தலின் அது தடுமாறு
தொழிலாயிற்று. அச்சொல்லொடு பெயர்களும் தொடர்ந்திருத்தலின் தடுமாறு
தொழிற்பெயராயிற்று.

இத்தொடரில் ‘புலியைக் கொன்ற யானை’ என்று இரண்டனுருபு வைத்து விரிப்பின்,
யானை வினைமுதலாகிப் புலி செயப்படு பொருளாகும். ‘புலியால் கொல்லப்பட்ட யானை’
என்று மூன்றனுருபு வைத்து விரிப்பின், புலி வினைமுதலாகி யானை செயப்படு பொருளாகும்.
(தொல் - சேனா - விளக்கவுரை - 96) (78)

வாழ்ச்சிப் பொருள்

536. ஆறு மேழும் வாழ்ச்சியொடு சிவணும்.

(இ-ள்.) ஆறாம் வேற்றுமையும், ஏழாம் வேற்றுமையும் வாழ்ச்சிக்கு ஒக்குமென்க.

(வ-று.) காட்டதியானை, காட்டின் கண்யானை. ((79)

ஓம்படைப் பொருண்மை

537. இரண்டு மூன்றும் ஓம்படைக் கொக்கும்.

(இ-ள்.) ஓம்படைப் பொருண்மைக்கு இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம்
வேற்றுமையுமொத்த வுரிமையவாமென வறிக.