சொல்லதிகாரம்150முத்துவீரியம்

(இ-ள்.) எவ்வுருபிற் கூறிற்றானாலும் பொருள்போம் வழியே வேற்றுமை
பொருந்துமென்க.

(வ-று.) மணற்கீன்ற நாணற்கிழங்கின்முளை, மணற்கணீன்ற நாணற்கிழங்கின்முளை. (84)

உருபுகள் இணைந்தும் தொக்கும் வருதல்

542. ஓருரு பேனைய வுருபொடு சிவணலும்
     தொக்குநின் றொழுகலும் வழுவா காவே.

(இ-ள்.) ஒரு வேற்றுமையுருபு வேறொரு வேற்றுமையுருபோடு பொருந்தலும்
தொக்குநின்று நடத்தலும் குற்றமில்லையாம்.

(வ-று.) சாத்தனதனை, சாத்தனதனொடு, சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தனதுவது,
சாத்தனதன்கண், நிலங்கடந்தான், தாய் மூவர், கருப்புவேலி, வரைவீழருவி, சாத்தன்கை,
குன்றக்கூகை.

(வி-ரை.) ஓருருபு பிறிதோருருபை யேற்றல் எனப் பொதுவகையாற் கூறினாரேனும்,
ஈண்டுப் பிறவுருபை ஏற்றற்கு ஆறனுருபே ஏற்றதாகக் கொண்டனர் உரையாசிரியர்.
இளம்பூரணரும் சேனாவரையரும் ‘பிறிது பிறிதேற்றல்’ (தொல் - சொல் - 104) என்னும்
நூற்பாவில் இங்ஙனமே உரை கண்டனர். எனினும் தெய்வச் சிலையாரும், சிவஞான
முனிவரும் இதனை வன்மையாக மறுப்பர். அத்திறமெல்லாம் அவரவர் உரை நோக்கி யறிக.

‘பிறிது பிறிதேற்றலும் உருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப’

(தொல் - சொல் - 104) என்ற தொல்காப்பியக் கருத்தை இந்நூற்பா தழுவியதாகும். (85)

உருபுகள் எதிர்மறுத்துரைப்பினும் பொருள் திரியாது வருதல்

543. எதிர்மறுத் துரைப்பினும் பொருணிலை திரியா.

(இ-ள்.) விதிமுகத்தாற் கூறாது எதிர்மறுத்துக் கூறினும் தத்தம் இலக்கணத்தான் வரும்
பொருணிலைதிரியா வேற்றுமை யுருபுகள்.

(வ-று.) மரத்தைக் குறையான், வேலானெறியான், குறையான், எறியான், என்றவழி
வினை நிகழாமையின், மரமும், வேலும், செயப்படு பொருளும், கருவியு
மெனப்படாவாயினும் எதிர்மறை வினையும் விதி வினையோ டொக்குமென்பது
நூன்முடிபாகலால் ஆண்டுவந்த வுருபும். செயப்படுபொருண் முதலாயினவற்று
மேல்வந்தனவெனப் படுமென வழுவமைதியாம்.