சொல்லதிகாரம் | 151 | முத்துவீரியம் |
(வி-ரை.)
‘எதிர்மறுத்து
மொழியினும் தத்தம் மரபின்
பொருள்நிலை திரியா
வேற்றுமைச் சொல்லே’
(வேற்றுமை மயங் - 24) என்னும் தொல்காப்பிய நூற்பாவைத்
தழுவியதாகும். (86)
ஐ, கு, ஆன் என்பன அகரம்
பெறுதல்
544. ஐ, கு, ஆ னென வரூஉ மிறுதி
அ வொடு சிவணும்
யாப்பின் மருங்கே.
(இ-ள்.) ஐ, கு, ஆன் எனவரு மூன்றுருபுந்
தொடரிறுதிக்கணின்றவழி அகரத்தோடு
பொருந்தி நிற்றலு முடையன வாஞ் செய்யுட்கணென்க.
(வ-று) காவலோனைக்
களிறஞ்சும்மே, காவலோனக் களிறஞ்சும்மே,
கடிநிலையின்றேயாசிரியற்கு, கடிநிலையின்றே
யாசிரியற்க (தொல் - புள்ளி - 94)
புரைதீர்கேள்விப் புலவரான், புரைதீர்கேள்விப்
புலவரான எனவரும். (87)
அஃறிணைக்கண் ஆன்
அகரமாகத் திரிதல்
545. அஃறிணை மருங்கி
னான்அ வாகும்.
(இ-ள்.) அஃறிணைக்கண்
ஆன்உருபொன்றுமே அகரத்தோடு பொருந்துமென்க.
(வ-று.) புள்ளினான்,
புள்ளினான எனவரும்.
(வி-ரை.)
‘ஐயான்குச் செய்யுட்
கவ்வு மாகும்
ஆகா அஃறிணைக் கானல்
லாதன’
(நன் - பெயரி - 61) என்பர்
நன்னூலாரும். (88)
நான்க னுருபு பிறவுருபுகளோடு
கூடிவருதல்
546. குச்சில வுருபொடு
கூடிநின் றொழுகும்.
(இ-ள்.) நான்காம்
வேற்றுமை யுருபு சிலவுருபுகளோடு கூடி நடக்கும். (89)
|