சொல்லதிகாரம் | 154 | முத்துவீரியம் |
ஒரு உருபு பிற வுருபோடும்
வரும்
555. மற்றைய வுருபும்
அவற்றோ ரற்றே.
(இ-ள்.) நான்கனுருபல்லாத
பிறவுருபுகளுந் தொகையல்லாத தொடர்மொழிக்கண்
ஒன்றன் பொருள் சிதையாமல் ஒன்று மயங்குதற்கட்
குற்றமிலவாமென்க.
(வ-று.) நூலதுகுற்றங் கூறினானென்னுந்
தொடர்மொழிக்கண் நூலைக்
குற்றங்கூறினானெனவும், அவட்குக் குற்றேவல் செய்யுமென்னுந்
தொடர்மொழிக்கண் அவளது
குற்றேவல் செய்யுமெனவும் வரும்.
(வி-ரை.)
‘ஏனை யுருபும் அன்ன மரபின
மான மிலவே சொன்முறை
யான’ (வேற்றுமை மயங் - 28)
என்னும்
தொல்காப்பியக் கருத்தைத் தழுவியதாகும். (98)
விளியுருபு
556. விளியெனப் படுப
ஏற்கும் பெயரொடு
விளங்கத் தோன்று
மியற்கைய வென்ப.
(இ-ள்.) விளியென்று
கூறப்படுவன தம்மை யேற்கும் பெயரொடு விளங்கத் தோன்றும்
இயல்புடையனவா மென்க. (99)
விளிகொள்ளும் பெயரும்
கொள்ளாப் பெயரும்
557. அதுவே,
விளிகொளும் பெயரும்
விளிகொளாப் பெயரும்
எனவிரு திறத்தவா மென்மனார் புலவர்.
(இ-ள்.) அதுவே விளிகொளும்
பெயரும், விளிகொளாப் பெயருமென விரண்டு
திறத்தனவாம். (100)
உயர்திணைக்கண்
விளியேற்கும் உயிர் ஈறுகள்
558. அவைதாம்,
இ, உ, ஐ, ஓ விறுதிக் கிளவி
உயர்திணை மருங்கின்
விளியேற் கும்மே.
|