சொல்லதிகாரம் | 155 | முத்துவீரியம் |
(இ-ள்) மேற்கூறப்படுவன
வாகிய பெயர்தாம் இ, உ, ஐ, ஓ, களையிறுதியாகிய நான்கு
பெயரும் உயர்திணைக்கண் விளியேற்குமென வறிக. (101)
இ, ஐ விளியேற்குமாறு
559. அவற்றுள்,
இ, ஈ யாகும் ஐ, ஆ வாகும்.
(இ-ள்.) முற்கூறிய
நான்கீற்றினுள் இ, ஈ யாயும் ஐ, ஆ வாயும்
விளிக்குமென்க.
(வ-று.) நம்பி, நம்பீ;
நங்கை, நங்காய். (102)
உ, ஓ விளியேற்குமாறு
560. உகரம் ஓகாரம் ஏயொடு
சிவணும்.
(இ-ள்.) உ, ஓ, ஏ
பெற்றுவிளிக்கும்.
(வ-று.) வேந்து, வேந்தே;
கோ, கோவே. (103)
முற்கூறிய உகரம்
குற்றியலுகரம் எனல்
561. உகரந் தானே குற்றிய
லுகரம்.1
(இ-ள்.) முற்கூறிய வுகரமானது
குற்றியலுகரமாம். (104)
உயர்திணைக்கண் பிற
ஈறுகள் விளியேலாமை
562. உயர்திணை மருங்கினே
னையவுயிர் விளியா.
(இ-ள்.) உயர்திணைக்கண்
முற்கூறிய நான்கு ஈறுமல்லாத வுயிர் விளியேலாவா
மெனவறிக. (105)
அளபெடை மிகூஉம் இகரஇறு
பெயர்
563. அளபெடை மிகூ மிகர விறுபெயர்
இயற்கைய வாகு மென்மனார்
புலவர்.
(இ-ள்.) அளபெடை
தன்மாத்திரையின் மிக்கும் இகரவிறுதிப் பெய ரியல்பாய்
விளிக்குமென்க.
1. தொல் - சொல் - 123.
|