சொல்லதிகாரம் | 157 | முத்துவீரியம் |
னகரம் விளியேற்குமாறு
568. அன்னெ னிறுதி யாவா
கும்மே.
(இ-ள்.) முற்கூறியவற்றுள்
அன்னென்னும் னகரவிறுதி ஆவாக விளிக்கும்.
(வ-று.) சோழன், சோழா.
(வி-ரை.)
தொல்காப்பியத்துள் அவற்றுள் என்ற தனிச்
சொல்லுடன் இந்நூற்பா
இடம்பெற்றுள்ளது. (111)
னகரம் அண்மைக்கண்
விளியேற்குமாறு
569. அண்மைக் கிளவிக்
ககர மாகும்.
(இ-ள்.) அண்மை விளிக்கண்
அகரமாய் விளிக்கும்.
(வ-று.) துறைவன், துறைவ;
ஊரன், ஊர. (112)
ஆன் என்பது
விளியேற்குமாறு
570. 1 ஆனென் னிறுதி
யியற்கை யாகும்.
(இ-ள்.) ஆனென்னும்
னகரவிறுதிப்பெயர் இயல்பாய் விளிக்கும்.
(வ-று.) மலயமான், சேரமான்.
(113)
பண்புகொள் பெயர்
விளியேற்குமாறு
571. பண்புகொள் பெயரா
னாயா கும்மே.
(இ-ள்.) ஆனிறுதி
னகரவீற்றுப் பண்புப்பெயர் ஆயாக விளிக்கும்.
(வ-று.) கரியான், கரியாய்.
(114)
தொழிற் பெயர்
விளியேற்குமாறு
572. தொழிற்பெயர்க்
கிளவி யவற்றோ ரற்றே.
(இ-ள்.) ஆனிறுதித் தொழிற்பெயர்
னகரவீற்றுப் பண்புப் பெயரைப்போல ஆயாக
விளிக்கும்.
1. தொல் - சொல் - 132.
|