| சொல்லதிகாரம் | 158 | முத்துவீரியம் |  
  
(வ-று.) வந்தான், வந்தாய்;
சென்றான், சென்றாய். (115) 
அளபெடைப் பெயர்
விளியேற்குமாறு 
573. 1 அளபெடைப் பெயரே
யளபெடை யியல. 
(இ-ள்.) ஆனீற்றளபெடைப்
பெயர் இகரவீற்றளபெடையைப் போல மூன்று
மாத்திரையின் நீண்டு இயல்பாய் விளிக்கும். 
(வ-று.) உம்பர்கிழாஅஅஅன்.
(116) 
முறைப் பெயர்
விளியேற்குமாறு 
574. முறைப்பெயர்க் கிளவி
யேயொடு சிவணும். 
(இ-ள்.) னகரமெய்யீற்று
முறைப்பெயர்ச்சொல் ஏகாரம் பெற்று விளிக்கும். 
(வ-று.) மகனே. (117) 
விளியேலாப் பெயர்கள் 
575. யானவ னிவனுவன்
விளியே லாவே. 
(இ-ள்.) யான், அவன், இவன்,
உவன் விளியேலாவாம். (118) 
இதுவுமது 
576. யாவனு மவ்வியல்
பிற்றா கும்மே. 
(இ-ள்.) யாவனென்னும்
வினாப் பெயரும் விளியேலாவாம். (119) 
ஆர், அர், என்பன
விளியேற்குமாறு 
577. 2 ஆரு மருவு மீரொடு
சிவணும். 
(இ-ள்.) ரகர
மெய்யிறுதியாகிய ஆர், அர், ஈராக விளிக்கும். 
(வ-று.) பார்ப்பார்,
பார்ப்பீர், கூத்தர், கூத்தீர். (120) 
1. தொல் - சொல் - 135. 
2. தொல் - சொல் - 138. 
			
				
				 |