சொல்லதிகாரம்162முத்துவீரியம்

(இ-ள்.) தமர், நுமர், தமன், நுமன், தமள், நமள், நுமள், நமர் விளியே
லாவாமெனவறிக. (136)

பெயரியல் முற்றும்.

2. வினையியல்

வினையின் இலக்கணம்

594. 1 வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
       நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.

(இ-ள்.) வினையென்று கூறப்படுவது வேற்றுமையோடு பொருந்தாது, ஆராயுங்காலை
முக்காலத்தோடும் புலப்படும். ஈண்டு வேற்றுமை யென்றது உருபை.

(வ-று.) உண்டான், உண்ணா நின்றான், உண்பான், கரியன் வேற்றுமை கொள்ளாது
காலமோடு தோன்றியவாறு காண்க. (1)

காலம் மூன்று

595. 2 காலந் தாமே மூன்றென மொழிப.

(இ-ள்.) மேற் றோற்றுவாய் செய்யப்பட்ட கால மூன்றென்று கூறுவர் புலவரென வறிக.
(2)

தெரிநிலை வினையும் குறிப்பு வினையும்

596. இறப்பு நிகழ்வு மெதிர்வு மென்று
     சொலப்படு மூன்று காலமுங் குறிப்பு
     வினையொடு பொருந்து மெய்ந்நிலை யுடைய
     வினைமொழி பிறக்கும் விழுமிய நெறிக்கே.

(இ-ள்.) இறந்தகாலமும், நிகழ்காலமும், எதிர்காலமுமென்று கூறப்படு மூன்றுகாலமும்
குறிப்புவினையோடும் பொருந்து மெய்ந் நிலைமையையுடைய வினைச்சொல்லானவை
தோன்று நெறிக்கண். எனவே காலமூன்றாவன இறப்பு, நிகழ்வு, எதிர்வு

1. தொல். சொல் - 198.

2. தொல். சொல் - 191.