சொல்லதிகாரம் | 167 | முத்துவீரியம் |
யகர ஈற்றயல் ஆ, ஓ ஆதல்
609. ஆயென் கிளவியு
மவற்றோ ரற்றே.
(இ-ள்.) முன்னிலையீற்றுள்,
ஆயென்னும் ஈறு முற்கூறப்பட்டன போல ஆ,
ஓவாகுமென்க.
(வ-று.) ‘வந்தோய் மன்ற
தெண்கடற் சேர்ப்ப’ (அகம் - 80) (16)
குறிப்பாற் காலந்
தோன்றுவன
610. உண்மையி னின்மையின் வன்மையி னன்மையின்
வருவன காலங் குறிப்பாற்
றோன்றும்.
(இ-ள்.) உண்மை, இன்மை,
வன்மை, அன்மை யென்னும் பொருள்பற்றி வருவன
காலங் குறிப்பானறியப்படும்.
(வ-று.) உளன், இலன், வலன்,
அலன். (17)
குறிப்பு வினை
611. பன்மையு மொருமையும் பாலறி வந்த
குறிப்புப் பொருண்மையைக் கொடுவரு வினைச்சொல்
மேல்வரு முயர்திணை
மருங்கிற் கூறிய
தெரிநிலை வினையொடு
சிவணு மென்ப.
(இ-ள்.) பன்மையும்
ஒருமையுமாகிய பால்விளக்கிக் குறிப்புப் பொருண்மையை
யுடையவாய்வரும் வினைச்சொல் மேல்வரும் உயர்திணைக்கட்கூறிய
தெரிநிலை
வினையோடொக்கும்.
(வ-று.) கரியன், கரியான், கரியள்,
கரியாள், கரியர், கரியார், கரியம், கரியாம்,
கரியெம், கரியேம், கரியென், கரியேன்.
(18)
அஃறிணைப் படர்க்கைப்
பன்மை வினைமுற்று
612. அ ஆ வகர விறுதிக்
கிளவி
அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சொல்லே.
(இ-ள்.) அகர, ஆகார, வகர
மெய்யீறாகிய மொழிகள் அஃறிணைப் பன்மைப்
படர்க்கைச் சொல்லாம்.
(வ-று.) உண்டன, உண்ணா வருவ.
(19)
|