சொல்லதிகாரம் | 168 | முத்துவீரியம் |
அஃறிணைப் படர்க்கை
ஒருமை வினைமுற்று
613. துடுறுக் குற்றிய லுகர வீற்ற
அத்திணை யொன்றன்
படர்க்கைச் சொல்லே.
(இ-ள்.) து, டு, றுக்
குற்றியலுகரத்தை யீறாகிய மொழி யஃறிணை யொன்றன்பாற்
படர்க்கைச் சொல்லாம்.
(வ-று.) உண்டது, குறுந்தாட்டு,
கூயிற்று எனவரும். (20)
எவன்
614. எவனென் வினாவே
யிருபாற்கு முரிய.
(இ-ள்.) எவனென்னும்
வினாச்சொல் மேற்கூறிய அஃறிணை யிருபாற்கு
முரியவாமென்க.
(வ-று.) அஃதெவன்
அவையெவன். (21)
குறிப்புவினைச்
சொற்கள்
615. இன்றில வுடைய
வன்றுடைத் தல்ல
என்பவும் பிறவும்
வினைக்குறிப் பாகும்.
(இ-ள்.) இன்று, இல, உடைய, அன்று,
உடைத்து, அல்ல என்பவும் இவைபோல்வன
பிறவுங் குறிப்புவினைச் சொல்லாமென்க.
(வ-று.) கோடின்று, செவியில, தோடுடைய,
அதுவன்று, கோடுடைத்து அவையல்ல.
(22)
இருதிணைப் பொதுவினை
616. வியங்கோள் முன்னிலை வினையெஞ்சு கிளவி
செய்ம்மன வேறு செய்த செய்யும்
ஒருகா லுயர்திணை யுணர்த்தி யொருகால்
அஃறிணை யுணர்த்தியு
மாயிரு திணைக்கும்
ஒத்த வுரிமைய வாகு மென்ப.
(இ-ள்.) வியங்கோள்,
முன்னிலை, வினையெச்சம், செய்ம்மன, செய்த, செய்யும்,
வேறு ஆகிய வேழுசொல்லும், ஒருகாலுயர்திணை யுணர்த்தியும்,
ஒரு
காலஃறிணையுணர்த்தியும்,
இருதிணைக்கு மொத்த வுரிமையவாம்.
|