சொல்லதிகாரம் | 169 | முத்துவீரியம் |
வியங்கோள்
ஏவற்பொருட்டாய் வருவது; முன்னிலை எதிர் நின்றான்
றொழிலுணர்த்துவது;
வினையெச்சம், வினையையொழிபாக வுடையவினை; செய்மன,
மனவீற்றுமுற்றாய் எதிர்கால
முணர்த்துவது; வேறு, தன்னை யுணர்த்திநின்றது; செய்த
அகரவீற்று எச்சமாய் இறந்தகால
முணர்த்தியது. (23)
முன்னிலை ஒருமைவினை
617. ஐயா யிறுதி முன்னிலைக் கிளவி
ஒருவ னொருத்தி
யொன்றற்கு முரிய.
(இ-ள்.) முற்கூறியவற்றுள்
ஐயும், ஆயும், இறுதியாகிய முன்னிலை வினைச்சொல்,
ஒருவற்கும், ஒருத்திக்கும், ஒன்றற்கு முரியவாம்.
(வ-று.) உண்டனை, உண்டாய்.
(24)
இதுவுமது
618. இகர விறுதியு மவற்றோ
ரற்றே.
(இ-ள்.) இகரவீற்று
முன்னிலைப்பெயரும், ஒருவற்கும், ஒருத்திக்கும், ஒன்றற்கு
முரியவாம்.
(வ-று.) உரைத்தி. (25)
முன்னிலைப்பன்மை வினை
619. இர் ஈர் மின்னீ றாம்பெயர்க் கிளவி
பல்லோர் மருங்கினும் பலவொடுஞ் சிவணும்.
(இ-ள்.) இர், ஈர், மின்,
ஈறாகிய மொழி பல்லோர் கண்ணும் பலவற்றின் கண்ணும்
பொருந்தும்.
(வ-று.) உண்டனிர், உண்டீர்,
உண்மின். (26)
ஐம்பால், மூவிடத்திற்
குரியன
620. முன்னிலை யொழியமற்
றேனைய வெல்லாம்
ஐம்பான் மூவிடத்
தொடுநிலை பெறுமே.
(இ-ள்.) முன்னிலை
வினையொழிய மற்றையவாறும் மூன்றிடம் ஐம்பாற்கு
முரியவாம்.
|