| எழுத்ததிகாரம் | 17 | முத்துவீரியம் |  
  
எழுத்துக்களின்
பிறப்பிடம் 
43. உயிரிடை யின மிடறுரம் வலியுச்சி 
    மெலியிட மாமென வேண்டப்
படுமே. 
(இ-ள்.) உயிர்
பன்னிரண்டிற்கும், இடையினம் ஆறுக்கும்
கழுத்திடமாகும். வல்லினம் 
ஆறுக்கும்
நெஞ்சிடமாகும். மெல்லினம் ஆறுக்கும்
தலையிடமாகுமென்க. 
(வி-ரை.) 
‘‘ஆவி இடைமை இடம்மிட
றாகும் 
மேவும் மேன்மைமூக்
குரம்பெறும் வன்மை’’ (எழுத்து - 20) 
என்பர் நன்னூலார்.
மெல்லினம் ஆறும் மூக்கினிடமாகப் பிறக்கும் எனத்
(பிறப் - 18) 
தொல்காப்பியரும், நன்னூலாரும் கூற இவ்வாசிரியர்
தலையிடமாகப் பிறக்கும் என்றல் 
புதியதாகும் எனினும் தலையை இடமாகக் கொண்டு
எவ்வெழுத்தும் பிறப்பதில்லை யென்பர் 
இக்காலத்து ஆய்வாளர்கள். (43) 
அ, ஆ. 
44. அவற்றுள் 
அ, ஆ, வங்காப் பொடுவரு
மென்ப. 
(இ-ள்.) அகரமும், ஆகாரமும்
வாயைத் திறத்தலால் பிறக்கும். (44) 
இ, ஈ, எ, ஏ. 
45. இ, ஈ, எ, ஏ, ஐயங்
காப்பொடு 
    மேல்வாய்ப் பல்லடி நாவிளிம் புறவரும். 
(இ-ள்.) இகர ஈகார, எகர
ஏகார, ஐகாரங்கள் வாயைத் திறத்தலோடு மேல்வாய்ப் 
பல்லடியை நாவோரம் பொருந்தப்
பிறக்கும். (45) 
உ, ஊ, ஒ, ஓ, ஒள. 
46. 1உ, ஊ, ஒ, ஓ, ஒளவிதழ்
குவிவே. 
(இ-ள்.) ஊகர உகார, ஒகர ஓகார ஒளகாரங்கள்
மேல் உதடும் கீழ்உதடும் குவிதலால் 
பிறக்கும். (46) 
1. நன் - எழுத் - 23. 
			
				
				 |