சொல்லதிகாரம்170முத்துவீரியம்

(வ-று.) அவன்செல்க, அவள்செல்க, அவர்செல்க, அதுசெல்க, அவைசெல்க,
நான்செல்க, நீசெல்க, அவன்செல்க.

(வி-ரை.) எடுத்துக்காட்டு வியங்கோளுக்கு மட்டுமேயுள்ளது. எஞ்சியவற்றிற்கு வருமாறு:

உழுது வந்தேன், உழுது வந்தேம், உழுது வந்தாய், உழுது வந்தீர், உழுது வந்தான்,
உழுது வந்தாள், உழுது வந்தார், உழுது வந்தது, உழுது வந்தன எனவும்; யானில்லை,
யாமில்லை, நீயில்லை, நீயிரில்லை, அவனில்லை, அவளில்லை, அவரில்லை,
அதுவில்லை, அவையில்லை எனவும்; யான் வேறு, யாம் வேறு, நீவேறு, நீயிர்வேறு,
அவன்வேறு, அவள்வேறு, அவர்வேறு, அதுவேறு, அவை வேறு, எனவும்; யானுண்மன,
யாமுண்மன, நீயுண்மன, நீயிருண்மன, அவனுண்மன, அவளுண்மன, அவருண்மன,
அதுவுண்மன, அவையுண்மன எனவும்; யானுண்ணுமூண், யாமுண்ணுமூண், நீயுண்ணுமூண்,
நீயுருண்ணுமூண், அவனுண்ணுமூண், அவளுண்ணுமூன். அவருண்ணுமூன்,
அதுவுண்ணுமூன், அவையுண்ணுமூண் எனவும்; அவன் வரும், அவள் வரும், அதுவரும்,
அவை வரும் எனவும்; யானுண்ட வூண், யாமுண்ட வூண், நீயுண்ட வூண்,
நீயிருண்ட வூண், அவனுண்ட வூண். அவளுண்ட வூண், அவருண்ட வூண், அதுவுண்ட
வூண், அவையுண்ட வூண் எனவும் வரும். (27)

வியங்கோள் வாராத விடம்

621. அவற்றுள்,
     தன்மைமுன் னிலையொடு சாரா வியங்கோள்.

(இ-ள்.) வியங்கோள் தன்மையினும், முன்னிலையினும் நிலைபெறாவாமென வறிக.

(வி-ரை.) இளம்பூரணர் சிறுபான்மை வியங்கோள் தன்மை முன்னிலையிலும்
வருமென்பர். நன்னூலாரும் இவரைத் தழுவி ‘வியங்கோள் இயலும் இடம்பால் எங்கும்
என்ப’ என்பர். எனினும் தெய்வச்சிலையார் மட்டும் தன்மை முன்னிலைக்கண்
வாராதென்பதை உறுதியாகக் கடைப்பிடிப்பர். இதுபற்றி அவர் உரைக்குமாறு:

நீவாழ்க, உண்க எனவும் வருமாலெனின், அவை அக் ககரம் பெறாக்காலும் பொருள்
இனிது விளங்குதலின் அவ்வாறு வருவன மரூஉ வழக்கென்று கொள்க. கடாவுக பாகநின்
கால்வல் நெடுந்தேர் எனச் செய்யுளகத்தும் வந்ததாலெனின், நீ கடாவுக என வாராது, பாக
கடாவுக என வருதலின் அது படர்க்கைப் பெயர் விளியேற்றவழி வந்ததென்க. ‘என் முதற்
பிழைத்தது கெடுகவென் னாயுள்’ (சிலப் - வழக் - 77) எனத் தன்மைக்கண் வந்ததாலெனின்,
ஆண்டுக் கெடுக எனப்பட்டது ஆயுளாதலின் அதன்மேல் வந்த தென்க. (தொல் - சொல் -
தெய்வ - 220). (28)