சொல்லதிகாரம்171முத்துவீரியம்

செய்யும் என்பது வாராத விடம்

622. 1 பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
       செல்லா தாகுஞ் செய்யுமென் முற்றே.

(இ-ள்.) பல்லோர் படர்க்கையினும், முன்னிலையினும் தன்மையினும், செய்யுமென்
முற்று நிலைபெறாவாமென்க.

(வ-று.) அவன் செய்யும், அவள் செய்யும், அது செய்யும், அவை செய்யும். (29)

வினையெச்சச் சொற்கள்

623. 2 செய்து செய்யூ செய்பு செய்தெனச்
        செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
        அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி.

(இ-ள்.) செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய,
செயற்கு ஒன்பதும் வினையெச்சச் சொல்லாம்.

(வ-று.) செய்து வந்தான், உண்ணூ வந்தான், நகுபு வந்தான்; சோலைபுக்கென வெப்பம்
நீங்கிற்று, உண்ணியர் வருவார், உண்ணிய தந்தான், மழைபெய்யிற் குளநிறையும்,
உண்ணவந்தான், உணற்கு வந்தான் எனவரும். (30)

இதுவுமது

624. பின்முன் கால்கடை யொடுவான் பானிடம்
     அன்ன கிளவியு மவற்றியல் பினவே.

(இ-ள்.) பின், முன், கால், கடை, வான், பான் ஈற்றவாய் வருவனவும் வினையெச்சமா
மென்க.

(வ-று.) கூதிர்போய்ப் பின்வந்தார், வருமுன் போயினார், நாடுங்கால் வருவார்,
வருங்கடை செல்வார், வருவான் போவான், உண்பான் வந்தான் எனவரும். (31)

தம் வினை முதல் வினையால் முடிவன

625. செய்து செய்யூ செய்பு வினைமுதல்
     முடிபின வாகு மொழியுங் காலே.

1. நன் - சொல் - வினை - 26. 2. தொல் - சொல் - வினை - 31.