சொல்லதிகாரம்184முத்துவீரியம்

வாழாதென்போ தெய்ய, ‘விளிந்தன்று மாதவர்த்தெளிந்த வென் னெஞ்சே’ (நற் -
178) எனவரும். (25)

பிரிவில் அசைநிலை

668. ஆக ஆகல் பிரிவி லசைநிலை.

(இ-ள்.) ஆக, ஆகல், இரண்டிடைச்சொல்லும் பிரிவிலசை நிலையாமென்க.

(வ-று.) ஆக ஆக, ஆகல்ஆகல் - எனவரும். (26)

உரிச் சொல்லின் இலக்கணம்

669. 1 உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
       யிசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
       பெயரினும் வினையினு மெய்தடு மாறி
       யொருசொற் பலபொருட் குரிமை தோன்றினும்
       பலசொல் லொருபொருட் குரிமை தோன்றினும்
       பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித்
       தத்த மருங்கிற் சென்றுநிலை மருங்கின்
       எச்சொ லாயினும் பொருள்வேறு கிளத்தல்.

(இ-ள்.) உரிச்சொல்லை விரிக்குங்கால், இசை, குறிப்பு, பண்பென்னும்
பொருண்மேற்றோன்றி, பெயரினும் வினையினும் தம் உருபு தடுமாறி, ஒருசொற் பலபொருட்
குரித்தாய்வரினும், பல சொல் லொருபொருட்குரித்தாய்வரினும், பயிலப்படாத சொல்லைப்
பயின்றவற்றோடு சார்த்திப் பெயரும் வினையுமாகிய தத்தமக் குரிய நிலைக்களத்தின்கண்
யாதாயினுமொரு சொல்லாயினும், வேறு பொருளுணர்த்தப்படு மென்க. (27)

மிகுதிப் பொருள் உணர்த்துவன

670. உறுதவ நனிமிகு திப்பொரு ளுணர்த்தும்.

(இ-ள்.) உறுவென்பதும், தவவென்பதும், நனியென்பதும் மிகுதிப் பொருளைத்தரும்.

(வ-று.) ‘உறுபுனல்தந்து’ (நாலடி - 185) ‘ஈயாது வாழும் உயிர்தவப் பலவே’ (புறம் -
236) ‘வந்துநனி வருந்தினை வாழி’ (அகம் - 19) (28)

1. தொல்-சொல். உரி - 5.