சொல்லதிகாரம் | 185 | முத்துவீரியம் |
புரை, உரு
671. புரையுயர் பாம்உரு
வுட்கா கும்மே.
(இ-ள்.) புரை, உயர்பாகும்,
உருவு, உட்காகுமென்க.
(வ-று.) ‘புரைய மன்ற
புரையோர் கேண்மை’ (நற் - 1) (29)
செல்லல், இன்னல்
672. செல்லலு மின்னலு
மின்னா மையே.
(இ-ள்.) செல்லலும்,
இன்னலும், இன்னாமையென்னுங் குறிப்பை யுணர்த்தும்.
(வ-று.) ‘மணங்கமழ்
வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம் -22) ‘வெயில்புறந்
தழூஉ மின்ன லியக்கத்து’ (மலைபடு - 374) (30)
மல்லல், ஏ
673. மல்லல் வளனே ஏபெற்
றாகும்.
(இ-ள்.) மல்லலென்பது
வளமும், ஏ யென்பது பெற்றும் ஆகிய குறிப்பைத்
தெரிவிக்கும்.
(வ-று) ‘மல்லன்மால்வரை’
(அகம்-52) ‘ஏகலடுக்கம்’ (நற்-116) (31)
உகப்பு, உவப்பு
674. 1 உகப்பே யுயர்த
லுவப்பே யுவகை.
(இ-ள்.)
உகப்பென்பது-உயர்தலும், உவப்பென்பது-உவகையும்
தரும்.
(வ-று.) விசும்புகந்தாடாது,
‘உவந்துவந்து’ (அகம்-35) எனவரும். (32)
பசப்பு, பயப்பு
675. பசப்பே நிறம்பயப்
பேபய னாகும்.
(இ-ள்) பசப்பென்பது-நிற
வேறுபாடும், பயப்பென்பது-பயனுந் தரும்.
1. தொல் - சொல் - உரி - 9.
|