சொல்லதிகாரம் | 186 | முத்துவீரியம் |
(வ-று.) ‘பசப்பூரும்மே’
(கலி - 7) ‘பயவாக் களரனையர் கல்லாதவர்’ (குறள் -
406)
(33)
இசைப்பு, இயைபு
676. இசைப்பிசை யியைபே
புணர்ச்சியா கும்மே.
(இ-ள்.) இசைப்பென்பது -
இசையும், இயையென்பது-புணர்ச்சியும் தரும்.
(வ-று.) யாழிசையூப்புக்கு,
இயைந்தொழுகும். (34)
அலமரல், தெருமரல்
677. அலமரல் தெருமர லாகுஞ்
சுழற்சி.
(இ-ள்.) அலமரலென்பதும்,
தெருமரலென்பதும் சுழற்சியாகிய குறிப்பைத்
தெரிவிக்கும்.
(வ-று.) ‘அலமரலாயம்’
(ஐங் - 66) ‘தெருமரலுள்ளம்’. (35)
மழ, குழ
678. 1 மழவுங் குழவு மிளமைப்
பொருள.
(இ-ள்.) மழவென்பதும்,
குழவென்பதும், இளமைக் குறிப்பை யுணர்த்தும்.
(வ-று.) ‘மழகளிறு’
(புறம்-38) ‘குழக்கன்று’ (நாலடி-101) (36)
சீர்த்தி, மாலை
679. சீர்த்தி மிகுபுகழ்
மாலை யியல்பே.
(இ-ள்.) சீர்த்தியென்பது,
மிகுந்த புகழையும், மாலையியல்பையுந் தரும்.
(வ-று.) ‘வயக்கஞ்சால்சீர்த்தி’,
‘இரவரன்மாலையம்’. (குறிஞ்சிப்-239) (37)
கூர்ப்பு, கழிவு
680. 2 கூர்ப்புங் கழிவு
முள்ளது சிறக்கும்.
1. தொல் - சொல் - உரி -
15.
2. ’’ ’’ ’’ 18.
|