சொல்லதிகாரம்189முத்துவீரியம்

(வ-று.) ‘நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே’ (புறம்-335) ‘கைதொழூஉப் பழிச்சி’
(மதுரைக் காஞ்சி - 665). (46)

மிகுதிப் பொருளன

689. கடியென் கிளவி காப்பே கூர்மை
     விரைவே விளக்க மிகுதிப் பொருள.

(இ-ள்.) கடியென்பது, காவல், கூர்மை, விரைவு, விளக்கம், மிகுதியாகிய குறிப்பை
யுணர்த்தும்.

(வ-று.) கடிநகர், கடிநுனைப்பகழி, ‘கடிவிடுதும்’ (புறம்-9) கடிமார்பன்,
கடிசெழுங்குரல். (47)

சொல்என்னும் ஒருபொருள் உணர்த்தும் பலசொற்கள்

690. இயம்ப னுவற்சி யிசைகூற்று விளம்பறை
     பாட்டுக் கரைநொடி பகர்ச்சி சொல்லே.

(இ-ள்.) இயம்பல், நுவற்சி, இசை, கூற்று, விளம்பு, அறை, பாட்டு, கரை, நொடி,
பகர்ச்சி, சொல்லென்னு மொரு குணத்தை யுணர்த்தும்.

(வ-று.) இயம்பலுற்றேன், நுவலலாமே, இசைத் தனர்புலவர், கூறலாமே,
விளம்பப்படுமே, அறைந்தனர்மாதோ, பாடலாமே, கரையப்படுமே, நொடிக்கலாமே,
பகரலாமே. (48)

செய்யுட்குரிய சொற்கள்

691. 1 இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல்என்
       றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே.

(இ-ள்.) இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச்சொல்லும், வடசொல்லுமென
அத்துணையே செய்யுளீட்டுதற்குரிய சொல்லாவனவாம். (49)

இயற்சொல்

692. அவற்றுள்,
     செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
     தம்பொருள் விளக்குந் தன்மைய வியற்சொல்.

(இ-ள்.) மேற்கூறிப்போந்த நான்கனுள் இயற்சொல்லாவன செந்தமிழ்நிலத்து
வழக்காதற்குப் பொருந்திக்

1. தொல் - சொல். எச் - 1.