சொல்லதிகாரம் | 190 | முத்துவீரியம் |
கொடுந்தமிழ்நிலத்துந்
தம்பொருள் வழுவாம லுணர்த்துஞ் சொல்லாமென்க.
(வ-று.) நிலம், நீர், தீ,
காற்று, ஆகாயம். (50)
திரிசொல்
693. ஒருபொருள் குறித்த பலசொல் லாயும்
பலபொருள் குறித்த
வொருசொல் லாயும்
எனவிரு பாற்றே
திரிசொற் கிளவி.
(இ-ள்.) ஒருபொருளைக்
குறித்துவரும் பலசொல்லும், பல பொருளைக் குறித்துவரு
மொருசொல்லுமென விருவகைப்படுந் திரிசொல்லென்க.
(வ-று.) கிள்ளை, சுகம்,
தத்தை இவை கிளியென்னுமொரு பொருள்குறித்த பலசொல்.
காப்பு, கூர்மை, விரைவு, அச்சம், வாசம்
இவை பலபொருள் குறித்த வொருசொல், வந்தமை
காண்க. (51)
வடசொல்
694. 1 பொதுவெழுத்தானுஞ்
சிறப்பெழுத் தானும்
ஈரெழுத் தானும் இயைவன
வடசொல்.
(இ-ள்.) ஆரியத்திற்குந்
தமிழிற்கும் பொதுவெழுத்தானும், சிறப்பெழுத்தானும்,
ஈரெழுத்தானும், இயைவன
வடசொல்லாமென்க.
(வ-று.) அமலம், கமலம்,
பொதுவெழுத்து; சுகி, போகி, சிறப்பெழுத்து; அரன்,
ஈரெழுத்து. (52)
திசைச்சொல்
695. செந்தமிழ் நிலனைச்
சேர்ந்த ஈராறு
நிலத்தினுந் தங்குறிப்
பினதிசைக் கிளவி.
(இ-ள்.) செந்தமிழ் நிலனைச் சேர்ந்த
பன்னிரண்டு நிலத்துந் தாங்குறித்தபொருளை
விளக்குவன திசைச்சொல்லா மென்க.
பன்னிரண்டு நிலமாவன பொங்கர் நாடு,
ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு,
குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு,
சீதநாடு, பூழிநாடு,
மலைநாடு.
1. நன் - சொல் - பெய - 17.
|