சொல்லதிகாரம்191முத்துவீரியம்

தென்பாண்டி நாட்டார் ஆவைப் பெற்றமென்பார், குட்ட நாட்டார் - தாயைத்
தள்ளையென்பார், குடநாட்டார் - தந்தையை அச்சனென்பார், கற்காநாட்டார் - வஞ்சகரை
கையரென்பார், பிறவுமன்ன. (53)

செய்யுள் விகாரம்

696. அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை
     வலித்தன் மெலித்த னீட்டல் குறுக்கல்
     விரித்த றொகுத்தலும் வருஞ்செயுள் வேண்டுழி.

(இ-ள்.) இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் ஆகிய நான்கு சொல்லையும்
செய்யுளாகத் தொடுக்குங்கால், மெலியை வலிக்கவேண்டும்வழி வலித்தலும்,
வலியைமெலிக்க வேண்டும்வழி மெலித்தலும், குறைவை விரிக்கவேண்டும் வழி விரித்தலும்,
மிகுவதைத் தொகுக்கவேண்டும்வழித் தொகுத்தலும், குறிலை நீட்ட வேண்டும் வழி நீட்டலும்,
நெடுமையைக் குறுக்க வேண்டும் வழிக் குறுக்கலுமாகிய அறுவகை விகாரமும்
செய்யுளின்பம்பெறச் செய்வான் நாட்டுதலை வலியாக வுடையனவாம்.

(வ-று.) குறுங்கை-குறுக்கை, வலித்தல்; குற்றியலுகரம் - குன்றியலுகரம், மெலித்தல்;
தணந்துறைவன் - தண்ணந்துறைவன் விரித்தல்; மழவரொட்டியர், தொகுத்தல்;
விடுமின்-வீடுமின், நீட்டல், தீயேன் - தியேன், குறுக்கல். (54)

பக்கச்சொல்

697. தகுதியும் வழக்கையுந் தக்கோர் வரையார்.

(இ-ள்.) தகுதியைப் பற்றியும் வழக்கைப் பற்றியும் நடக்கும் இலக்கணத்திற்குப்
பக்கச்சொல்லைக் கடியார் பெரியோர்.

(வ-று.) செத்தாரைத் துஞ்சினாரென்றலும், சுடுகாட்டை நன்காடென்றலும், ஓலையைத்
திருமுக மென்றலுமாம்.

(வி-ரை.) பக்கச் சொல் - சார்பாக வுணர்த்தும் சொல். ஒரு பொருளைக் குறித்ததற்கு
ஒருசொல் இருக்க, தகுதி காரணமாகவோ, வழக்கியல் காரணமாகவோ அச்சொல்லை
விடுத்து, அதன் சார்பாகப் பிறிதொரு சொல்லை வழங்குதல் உண்டு. அதுவே பக்கச்
சொல்லாகும்.

இறந்தவரைக் குறிக்கச் செத்தார் என்ற சொல் இருக்கத் தகுதி காரணமாக
அச்சொல்லை விடுத்துத் துஞ்சினார் என்றலின் அது பக்கச் சொல்லாயிற்று. பிறவும்
அன்ன.