சொல்லதிகாரம் | 192 | முத்துவீரியம் |
இதுபற்றி 473, 474 ஆம்
நூற்பாக்களில் முன்னரும் விளக்கி யுள்ளனர்
ஆசிரியர். ஆண்டும் காண்க. (55)
இயற்கைப் பொருள்
698. 1 இயற்கைப் பொருளை
யிற்றெனக் கிளத்தல்.
(இ-ள்.) தன்னியல்பில்
திரியாதுநின்ற பொருளை அதனினியல்பு கூறுங்கால் ஆக்கமுங்
காரணமுங் கொடாது இற்றெனக் கூறுக.
(வ-று.) நிலம்வலிது, நீர்
தண்ணிது, பிறவுமன்ன. (56)
செயற்கைப் பொருள்
699. 2 செயற்கைப் பொருளை
யாக்கமொடு செப்பல்.
(இ-ள்.) காரணத்தால்
தன்மைதிரிந்த பொருளை அத்திரிபு கூறுங்கால்
ஆக்கங்கொடுத்துக் கூறுக. (57)
ஆக்கப் பொருள்
700. 3 ஆக்கந் தானே காரண
முதற்றே.
(இ-ள்.) செயற்கைப்
பொருளை ஆக்கமொடு கூறுங்காற் காரணத்தை முற்கூறி
யதன்வழி
ஆக்கங் கூறுக.
(வ-று.) மயிர் நல்லவாயின, எருப்பெய்து
களைகட்டு நீர் கால்யாத்தமையாற்
பைங்கூழ் நல்லவாயின. (58)
மேலதற்கோர்
சிறப்புவிதி
701. வழக்கினு ளாக்கங் காரண மின்றியும்
வருமா ராயுங் காலத் தானே.
(இ-ள்.) வழக்கினுள் காரண
முதற்று எனப்பட்ட ஆக்கச்சொல் காரணமின்றியும்
வரும்.
(வ-று.) பயிர் நல்லவாயின,
மயிர் நல்லவாயின. (59)
1. தொல் - சொல் - கிளவி
- 19.
2. ’’ ’’ ’’ 20.
3. ’’ ” ’’ 21.
|