சொல்லதிகாரம் | 193 | முத்துவீரியம் |
ஐயக்கிளவிக்கண்
பொருளுணருமாறு
702. திணைதுணிந் ததன்பா
றுணியப் படாத
ஐயக் கிளவி யவ்வப் பொருள்வயிற்
பன்மை கூற லென்மனார்
புலவர்.
(இ-ள்.) திணை துணிந்து
அதன்பால் துணியப்படாத ஐயப் பொருளை
அவ்வத்திணைப்
பன்மையாற் கூறுக.
(வ-று.) ஆண்மகன்
கொல்லோ, பெண்மகள் கொல்லோ, இஃதோ
தோன்றுவார்;
ஒன்றோ
பலவோ செய்புக்கன எனவரும்.
(60)
உருபு என்னும் சொல் வரும்
இடம்
703. ஐயமா மிருதிணை யகத்து
முருபைச்
செப்பினு மென்மனார் தெளிந்திசி னோரே.
(இ-ள்.) உருபெனக்
கூறுமிடத்தும் ஒருமையும் பன்மையுமாகப் படும் அஃறிணைப்
பொதுச்சொற்கண்ணும் இவ்விருகூற்றினும் ஐயப்புலப் பொதுச்சொல்லாதலும் உரித்தாம்.
(வ-று.) ஆண்மகன்
கொல்லோ, பெண்மகள் கொல்லோ, இஃதோ தோன்றுமுருபு;
ஒன்றோ பலவோ செய்புக்கவுருபு.
(வி-ரை.) இது,
‘உருபென மொழியினும்
அஃறிணைப் பிரிப்பினும்,
‘இருவீற்றும்
உரித்தேசுட்டுங் காலை’
என்னும்
தொல்காப்பியத்தைத் தழுவியதாகும்.
உருபுஎனில் வேற்றுமை யுருபு,
உவம வுருபு முதலியவற்றைக் குறிக்கும். உருவு என்ற
சொல்லே வடிவைக் குறிக்கும். ஆதலின் உருவு எனப் பாடம்
ஓதுதலே ஈண்டுச்
சிறப்பதாகும்.
(61)
அன்மைச் சொல் வரும்
இடம்
704. ஐயுற் றுத்துணி
தரும்வழி அன்மைத்
தன்மையைச் சுட்டலு முரிய
வாகும்.
(இ-ள்.) ஐயுற்றுத்
துணியும்வழி அன்மைக்கிளவி அன்மைத்தன்மையைச்
சுட்டி நிற்றலும்
உரியவாம்.
(வ-று.) குற்றி கொல்லோ
மகன் கொல்லோ வென்றானும், ஒன்று கொல்லோ பல
கொல்லோ வென்றானும், ஒருவன் கொல்லோ
|