சொல்லதிகாரம்195முத்துவீரியம்

(இ-ள்.) தரலும், வரலும், கொடையும், செலலும் படர்க்கையைப் பொருந்தும்,
இவற்றுள் முதலிற் கூறிய தரலும் வரலும் தன்மை முன்னிலைகளைப் பொருந்தும்.

(வ-று.) அவனுக்குத் தந்தான், அவனிடத்து வந்தான், அவனுக்குக் கொடுத்தான்,
அவனிடத்துச் சென்றான் எனவும்; எனக்குத் தந்தான், என்னிடத்து வந்தான், உனக்குத்
தந்தான், உன்னிடத்து வந்தான் எனவும் வரும். (65)

யாது, எவன்

708. யாதெவ னறியாப் பொருளொடு சிவணும்.

(இ-ள்.) யாதும், எவனும், அறியாப்பொருட்கண் வினாவாக நிலையுமென்க.

(வ-று.) இச்சொற்குப் பொருள் யாது; இச்சொற்குப் பொருளெவன். (66)

யாது என்பதற்குச் சிறப்பு விதி

709. அவற்றுள்,
     யாதுஐய நீக்கற் பொருளொடு நிலையும்.

(இ-ள்.) முற்கூறிய இரண்டனுள் யாது ஐயநீக்கற் பொருளொடு நிலைபெறும்.

(வ-று.) இம்மரங்களுட் கருங்காலியாது, எனவரும். (67)

இனைத்தென அறிந்த சினை முதற் கிளவி

710. இனைத்தென வறிந்த சினைக்கு முதற்கும்
     வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும்.

(இ-ள்.) கேட்போரான் இத்துணையென்று அறியப்பட்ட சினைப்பெயர்க்கும்,
முதற்பெயர்க்கும், வினைப்படுதொகுதிக்கண் உம்மை கொடுத்தியம்புக.

(வ-று.) ‘பன்னிரு கையும் பாற்பட வியற்றி’; (திருமுருகா - 118) முரசு முழங்கு
தானைமூவேந்தரும் வந்தார். (68)

இல்லாப் பொருள்

711. இல்லாப் பொருளு மன்ன வியற்றே.