சொல்லதிகாரம்199முத்துவீரியம்

(இ-ள்.) வேறுபட்ட வினையையுடைய பல பொருட்குப் பொதுவாகிய சொல்லைப்
பொதுவினையைக் கொடுத்துக் கூறுவது நெறியாகுமென வறிக.

(வ-று.) அடிசில், அணி, இயம், படை என்னுந் தொடக்கத்தன. அடிசிலென்பது -
உண்பன, தின்பன, பருகுவன, நக்குவன வென்னும் நால்வகைக்கும், அணியென்பது -
கட்டுவன கவிப்பன, செறிப்பன, பூண்பன வென்னுந் தொடக்கத்தனவற்றிற்கும், படையென்பது
- எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவன வென்னுந் தொடக்கத்தனவற்றிற்கும்,
இயமென்பது - கொட்டுவன, ஊதுவன, எழுவன வென்னுந் தொடக்கத் தனவற்றிற்கும்
பொதுவாகலின், அடிசிலயின்றார், அணியணிந்தார், இயமியம்பினார், படை வழங்கினார். (79)

இதுவுமது

722. எண்ணுழி யும்பொது வினையா னியலும்.

(இ-ள்.) வேறு வினைப்பொருள்களைப் பொதுமொழியால் கூறாது
பிரித்தெண்ணுங்காலும் அதனதிலக்கணம் ஒருவினையாற் கூறாது பொதுவினையால் வரும்.

(வ-று.) சோறுங் கறியுமயின்றார்; யாழுங்குழலுமியம்பினார். (80)

இரட்டைக் கிளவி

723. 1 இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா.

(இ-ள்.) இரட்டித்து நின்று பொருளுணர்த்துஞ்சொற்கள் இரட்டித்து நிற்றலிற் பிரிந்து
நில்லாவாம்.

(வ-று.) மொடு மொடுத்தது; துடி துடித்தது. (81)

பல்பொருட் சிறப்புப் பெயர்

724. அஃறிணை யுயர்திணை யாமிரு மருங்கினும்
     ஒருபொரு ளாய்ப்பல பெயர்க்குப் பொதுமொழி
     பொதுமைவே றியம்பல் புலவோர் நெறியே.

(இ-ள்.) அஃறிணைக்கண்ணும் உயர்திணைக்கண்ணும், ஒருபெயராய்ப் பலபொருட்குப்
பொதுவாகிய சொல்லைப் பொதுமையின் வேறாகக் கூறுவரென்க.

1. தொல் - சொல் - கிளவி - 48.