சொல்லதிகாரம்202முத்துவீரியம்

(வ-று.) மாமரம்வீழ்ந்தது, விலங்குமாவீழ்ந்தது. (87)

விளங்க வுணர்த்தல்

730. ஒருபொருள் வேறுபா டுணருங் காலை
          விளங்கா தாயின் விளங்க விளம்புப.

(இ-ள்.) ஒருபொருள் வேறுபாடறியுங்காலை அஃதாற்றல் முதலியவற்றான்
விளங்காதாயின் அதனை விளங்கக் கூறுவர் புலவரென்க.

(வ-று.)

அரிதாரச் சாந்தங் கலந்தது போல
வுருகெழத் தோன்றி வருமே-முருகுறழும்
அன்பன் மலைபெய்த நீர்
பிறவு மன்ன. (88)

அஃறிணை முடிபிற் குரியன

731. ஆண்மை குடிமை யடிமை மூப்பே
     விருந்தே யிளமை வெண்மை யுறுப்பே
     குழுவே வன்மை குருடே மகவே
     அரசே காத லஃறிணை முடிபின.

(இ-ள்.) ஆண்மை முதலாகக் காதல் ஈறாகக் கூறிய பதினான்கு பெயரும் அஃறிணை
முடிபினவாம்.

(வ-று.) ஆண்மைநன்று, குடிமைநன்று, அடிமைநன்று, முப்புநன்று, விருந்துநன்று,
இளமைநன்று, வெண்மைநன்று. (89)

இதுவுமது

732. உயிரே கால முலகே யுடம்பே
     தெய்வம் பூதந் திங்கள் வினையே
     ஞாயிறு பிறவு மவற்றோ ரற்றே.

(இ-ள்.) உயிர்முதலாக ஞாயிறு இறுதியாகக் கூறிய ஒன்பது பெயரும், முற்கூறியவை
போலவே யுயர்திணைப் பெயராயினும் அஃறிணைமுடிபினவாம்.

(வ-று.) உயிர்போயிற்று, காலமாயிற்று, உலகம் பசித்தது, உடம்பு நுணுகிற்று,
தெய்வஞ் செய்தது, பூதம்புடைத்தது, திங்களெழுந்தது, வினைவிளைந்தது, ஞாயிறுபட்டது
எனவரும். (90)